ரயில்வே பணிகளில் மீண்டும் ‘ஹிந்தி திணிப்பு’

1 Min Read

தெற்கு ரயில்வே உத்தரவால் கொந்தளிப்பு

சென்னை, ஆக.27– அலுவலகப் பணிகளில் ஹிந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ஹிந்தி பயன்பாடு

தெற்கு ரயில்வே சென்னையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ரயில் இயக்கம், தொழில்நுட்பம், வணிகப் பிரிவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

தெற்கு ரயில்வேயில் இந்த ஹிந்தியில் பேசும் பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இதற்கிடையே மக்களுடன் நேரடி தொடர்பில் ரயில்வே ஊழியர்கள் உள்ளூர் மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, பயணச்சீட்டு கவுண்ட்டர்களில் உள்ள பணியாளர்கள் ஹிந்தியில் பேசுவதால் தமிழ்நாடு பயணிகள் பயணச்சீட்டு எடுப்பதில் சிரமத்தை சந்தித்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.

உத்தரவு

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயின் அலுவலகப்பணிகளில்  ஹிந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென தெற்கு ரயில்வே திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது. சிறு, சிறு குறிப்புகள் கூட ஹிந்தியில் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே, அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அலுவலகப்பணிகளில் ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க செப்டம்பர் 19ஆம் தேதி வரை சிறப்பு முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும். கடித பரிமாற்றங்களில் ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் துறைரீதியான ஆய்வு பயன் கூட்டங்களில் ஹிந்தி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை ஹிந்தி துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், தெற்கு ரயில்வே அறிவிப்புகள், ஒப்புதல், ஏற்பு, அனுமதி, முன்மொழிவு உள்ளிட்ட வார்த்தைகளை ஹிந்தியில் குறிப்பிட வேண்டும். பெரும்பாலானோர் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதிசெய்வது அவசியம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *