செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-
சூளைமேடு, சென்னை
தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் 23.08.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்; சூளைமேடு, சவுராஷ்டிரா நகர், முதல் தெருவில் சூளைமேடு பகுதி கழகத் தலைவர் நல்.இராமச்சந்திரன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை மற்றும் மாவட்ட இளை ஞரணி செயலாளர் பெரியார் யுவ ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார்.முன்னதாக மாலை 5.30 மணி அளவில் அறிவு மாணனின் கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி’ நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 112ஆவது வட்ட செயலாளர் த.பரி சிறிது நேரம் உரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததின் விளைவால் ஏற்பட்ட பயன்களை எடுத்துக் கூறி உரையாற்றினார்.
அடுத்து உரையாற்றிய திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகம் போன்றவை மக்களுக்காக ஆற்றிய பணிகளை பட்டியலிட்டு கூறினார்.
திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் தந்தை பெரியாரின் தொண்டினையும், தந்தை பெரியார் அவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தையும், தந்தை பெரியாரின் இட ஒதுக்கீடு கொள்கையை நீதிக் கட்சி ஏற்றத்தையும், இட ஒதுக்கீட்டிற்கான அடித்தளத்தை அமைத்ததையும், முத்தையா அவர்கள் இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்கியதையும் எடுத்துக் கூறி, இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட தடைகளையும், போராட்டங்களையும், இட ஒதுக்கீட்டிற் காக இந்திய அரசியல் சட்டம் திருத்தப் பட்டதையும், படிப்படியாக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்ட வரலாற்றையும் கூறி, ஆசிரியருக்கு கி.வீரமணி அவர் களால் 69% இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாது காக்கப்பட்டதையும் விரிவாக எடுத்துக் கூறி செங்கல்பட்டு மாநாடு வெற்றி அடைய அனைவருக்கும் அழைப்பு விடுத்து சிறப்பு உரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 109 ‘அ’ வட்ட செயலாளர் டேவிட் இன்பராஜ், பொன்சீலன், கிருஷ்ணன், 109 ‘அ’ வட்ட பகுதி பிரதிநிதி ஆர்.சேகர், நீலகண்டன், சிவா, போஸ்டல் பாஸ்கர், பரமேஸ்வரி, சாந்தி, தென்சென்னை மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, செயலாளர் பி.அஜந்தா, ஆர். தமிழ்ச்செல்வி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஆவடி மாவட்ட கழகத் துணை தலைவர் வை. கலையரசன், எம்ஜிஆர் நகர் வெ.கண்ணன், அரங்க.ராசா, வடசென்னை க.செல்லப்பன், அய்ஸ் அவுஸ் உதயா, சூளைமேடு ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக எம்.டி.சி.பா.இராஜேந் திரன் நன்றியுரையாற்றினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கழக சார்பில், 23.08.2025 அன்று மாலை 6 மணியளவில், விருதுநகர் மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல்.திருப்பதி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், மாவட்ட ப.க. தலைவரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ப.க. அமைப்பாளர் மா.பாரத் வரவேற்புரையாற்றினார்.
இராசபாளையம் மாவட்டத் தலைவர் பூ.சிவக்குமார் மந்திரமல்ல! அனைத்தும் தந்திரமே! எனும் செயல் விளக்க நிகழ்வினை சிறப்புற நடத்தினார். விருதுநகர் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ஆர்.மாதவன் வாழ்த்துரை வழங்கினார்.
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சாதனைகளை விளக்கி, செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்தும் சிறப்புரையாற்றினார்.
நகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், சி.பி.அய். நகரச் செயலாளர் கே.எஸ்.காதர்மைதீன், மாவட்டக் காப்பாளர் அ.தங்கசாமி, இராசபாளையம் மாவட்டச் செயலாளர் இரா.கோவிந்தன், மாவட்ட ப.க. செயலாளர் வாழ்வை.முத்தரசன், விருதுநகர் மாவட்ட மகளிரணித் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் பொன்மேனி ராஜயோகம், மாவட்டத் துணைச் செயலாளர் இரா.அழகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், சிவகாசி மாநகரச் செயலாளர் து.நரசிம்மராஜ், இளைஞரணிச் செயலாளர் ஜீவா முனீஸ்வரன், அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் மு.முனியசாமி, ஒன்றியச் செயலாளர் இரா.முத் தையா, இளைஞரணித் தலைவர் பா.சங்கர், காரியாபட்டி ஒன்றிய அமைப்பாளர் வீ.ஆதிமூலம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் பா.இராசேந்திரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் எசனைத் தேரடித்திடலில் 22.08.2025 மாலை 6 மணியளவில் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி வரவேற்புடன், கூட்டம் துவங்கியது.
மந்திரமல்ல,தந்திரமே என்னும் நிகழ்வினை மாவட்ட செயலாளர் விசயேந்திரன் நிகழ்த்தினார்.
தொடக்கவுரையாகமாவட்ட ப.க தலைவர் நடராசன், மாவட்ட காப்பாளர் ஆறுமுகம் பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், தமிழ் வழிக்கல்வி மாநிலத்தலைவர் சின்னப்பத்தமிழர், ஆத்தூர் கழக மாவட்ட ப.க.தலைவர் முருகானந்தம், ஆகியோர் மாநாடு குறித்து விளக்கவுரை ஆற்றிய பின் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன் சிறப்புரை ஆற்றினார். கிராம பொதுமக்களும், இளைஞர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு கருத்துகளை கேட்டனர்.பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
மதுரை அனுப்பானடி
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை அனுப்பானடியில் மாவட்ட துணைத் தலைவர் பொ.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ச.வேல்துரை வரவேற்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில செயலாளரும் பகுத்தறிவு பாவலருமான சுப.முருகானந்தம் தொடக்கவுரையாற்றினார். பேராசிரியர் மதுரை சுப.பெரியார்பித்தன் தன் நகைச்சுவையாகப் பேசி சிந்திக்க வைக்கும் உரையை வழங்கினார்.
க.அழகர், மாவட்ட துணைத் தலைவர் இரா.திருப்பதி திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் இராம.வைரமுத்து தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தால் தமிழர்கள் பெற்ற நன்மைகள்,அதைத் தொடர்ந்து திராவிட இயக்க தலைவர்கள் அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்கள் வரிசைப்படுத்தினார்.நிறைவுரையாற்றிய இரா.பெரியார்செல்வன் உரை வீச்சில் சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு,சமூகநீதி இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை ஆகியவற்றை பட்டியலிட்டார்.
ஆர்எஸ்எஸ் இந்த நாட்டிற்கு கேடான அமைப்பு காந்தியாரைக் கொலை செய்து, பாபர் மசூதியை இடித்து மதக் கலவரத்தை உண்டாக்கி அதன்மூலம் மக்களைப் பிரித்து வைக்கும் அமைப்பே ஆர்எஸ்எஸ் என எடுத்துரைத்தார்.
தமிழ் நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பிஜேபி அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளையும்,அதைத் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கவேண்டிய காரணங்களையும் விளக்கினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைத் செயலாளர் க.சிவா, பொ.தனுஷ்கோடி, கழக சொற்பொழிவாளர் அ.வேங்கை மாறன், வண்டியூர் கிருஷ்ணமூர்த்தி, போட்டோ சரவணன், முரளி, எல்அய்சி செல்லக்கிருட்டிணன், சண்முகசுந்தரம், அ.அழகுப்பாண்டி, பழனி ஆறுமுகா மோகன், அனுப்பானடி திமு.க முன் னோடி சண்.பாலசுப்பிரமணியம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பெரியார் செல்வன் பேச்சைக்கேட்டு ரசித்தனர். கூட்டத்திற்கு அனுப்பானடி தி.மு.க.வட்டச் செயலாளரும் வழக்குரை ஞருமான செ.தாமோதரன் சிறப்பான ஒத்துழைப்பு நல்கினார். முடிவில் பேக்கரி கண்ணன் நன்றிகூறினார்.
மதுரவாயல்
ஆவடி மாவட்டம் மதுவாயல் பகுதி திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் 22 -08 -2025 வெள்ளிக்கிழமை மாலை06-30 மணிக்கு மதுரவாயல் E B அலுவலகம் அருகில் ஜெய் பீம் அறிவு மாணன் இசை நிகழ்ச்சியுடன் கொட்டும் மழையில் துவங்கியது .பின்னர் மதுரவாயல் பகுதி திராவிட கழக தலைவர் சு .வேல்சாமி வரவேற்புரை ஆற்ற பகுதி செயலாளர் தமிழன் காசி அவர்கள் தலைமையில் துவங்கியது.
ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார் வேந்தன் அவர்கள் தொடக்க உரையாற்ற பின்னர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பத்ருதீன் மாநில திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் ஆகியோர் உரைக்குப்பின் திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு குறித்து விளக்க உரையாற்றினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் , மற்றும் கழகத் தோழர்களும் அனைத்து இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக மதுரவாயல் பகுதி திராவிடர் கழக துணைச் செயலாளர் கு. சந்திரசேகர் நன்றியுரை ஆற்றினார்.