வாயில் உண்டாகும் சிறிய காயங்களே, வாய்ப் புண்கள் ஏற்பட ஒரு பொதுவான காரணமாக உள்ளது. பல்லின் கூர்மையான ஓரங்கள், திடீரென்று கடித்துக்கொள்ளுதல் (இது குறிப்பாக கூர்மையான பற்கள் அல்லது ஞானப்பற்களினால் ஏற்படலாம்). கூர்மையான, உராய்வுத்தன்மையுடைய அல்லது அளவுக்கு அதிகமான உப்புள்ள உணவு, மோசமாக ஒட்டியுள்ள பொய்ப்பற்கள், பல்கவ்விகள் அல்லது பல்துலக்கியினால் ஏற்படும் காயம் போன்றவற்றினால், வாயின் மென் சவ்வு மேற்புறத்தில் புண்கள் ஏற்படலாம். காயத்திற்கான காரணி அகற்றப்பட்டுவிட்டால் (எடுத்துக்காட்டாக, மோசமாக பொருத்தப்பட்டிருக்கும் பொய்ப்பற்கள் அகற்றப்படுதல் அல்லது மாற்றப்படுதல்), இதுபோன்ற புண்கள் பொதுவாக மிதமான வேகத்தில் குணமாகிவிடும்.
இந்தப் புண்கள், பற்களில் வேலைப்பாடு செய்த பிறகு (பல் கட்டுவது, வேர் மருத்துவம்) ஏற்படுவது மிகவும் பொதுவானதாகவும் உள்ளது. வாயின் மென்மையான திசுக்களில் சிராய்ப்புகள் ஏற்படும் போது புண்கள் ஏற்படுகின்றன.
இரசாயன காயங்கள்
வலி நீக்கி மருந்து (ஆஸ்பிரின்) அல்லது மது வாயின் மேல் சவ்வில் படும்போது, திசுக்கள் சிதைந்து உரியவும் செய்து புண்ணை உருவாக்கலாம். சோடியம் லாரில் சல்ஃபேட் (எஸ்.எல்.எஸ்.), பெரும்பாலான பல்துலக்கிகளில் காணப்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும். இது வாய்ப்புண்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.
நோய்த்தொற்று
வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா சார்ந்த செயல்முறைகள் வாய்ப்புண் ஏற்பட வழிவகுக்கலாம். கைகளைக் கழுவாமல் வெடிப்புற்ற உதடுகளைத் தொடுவதன் மூலமாகவும் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.
வைரஸ் சார்ந்தவை
ஹெர்பிஸ் வைரஸ் மிகவும் பொதுவானதாகும். இது, மீண்டும் மீண்டும் ஏற்படும் அக்கி வடிவ புண்கள் ஏற்படக் காரணமாக இருக்கிறது. பொதுவாக இது வலியுடனும், வெடிக்கும் தன்மை கொண்ட பன்மடங்கு கொப்புளங்களாகவும் வரும். எச்அய்வி நோய் எதிர்ப்புக் குறைபாட்டை ஏற்படுத்தி, வாயில் வெள்ளை நிற திட்டுகளை உண்டாக்குகிறது.
பாக்டீரியா சார்ந்தவை
காசநோய் மற்றும் ‘கிரந்தி’ போன்ற நோய்களும் புண் ஏற்படுவதற்குக் காரணமாகலாம்.
காற்றில் வளரும், அக்டினோமைஸ்கள் மற்றும் வாய் பெருங்குடல் வாழ் தீங்கற்றநுண்ணுயிர் போன்ற சாதாரண பாக்டீரியாக்களும் புண்ணை உண்டாக்கும். இத்துடன், பூஞ்சணமும் வாய்ப்புண்ணிற்கான ஒரு காரணமாகும்.
வாய் குழிப்புண்
ஆஃப்தோஸ் (வாய் குழிப்புண்) புண்களின் காரணிகள் பல்வேறு நோய் செயல்முறைகளின் விளைவாக இருக்கின்றன. உடலால் கண்டுபிடிக்க முடியாத வேதிப்பொருட்கள் உடலைத் தாக்கும்போது ஆஃப்தோஸ் புண்கள் உருவாகின்றன என்று கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்புக் குறைபாடு
நோய் எதிர்ப்புக் குறைபாட்டின் காரணத்தினால் வாய்ப்புண்கள் திரும்பத் திரும்ப ஏற்படலாம். வாயின் சீதச்சவ்வுகளில் நோய் எதிர்ப்புப் புரதங்களின் அளவுகள் குறைந்து காணப்படுவதை இது குறிக்கிறது. வேதிச்சிகிச்சை, எச்அய்வி ஆகிய அனைத்தும் நோய் எதிர்ப்புக் குறைபாடு ஏற்படக் காரணமாகிறது. இந்த நோய் எதிர்ப்புக் குறைபாட்டின் வெளிப்பாடாக வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.
வாய்ப்புண் ஏற்படுவதற்குத் தன் தடுப்பாற்றலும் ஒரு காரணமாக உள்ளது. வாய் சீதச்சவ்வில் செதிலுறிவு / புண் ஏற்பட இது காரண மாகிறது.
ஒவ்வாமை
கனிமப் பூச்சு போன்ற ஒவ்வாமை ஊக்கிகளுடன் தொடர்பு ஏற்படுவதன் காரணத்தினால் புண்கள் ஏற்படுகின்றன.
உணவுத் திட்டம்
வைட்டமின் சி குறைபாட்டினால் ஸ்கர்வி ஏற்படலாம். இந்நோய் காயங்கள் ஆறுவதைத் தடை செய்து, புண்கள் உருவாக வழிவகுக்கிறது. இதேபோன்று, வைட்டமின் பி12, துத்தநாகம் போன்ற குறைபாடுகளினால் வாய்ப்புண் ஏற்படுவதுடன் தொடர்புடையதாக உள்ளது.
குழிநோய், புண்கள் ஏற்படுவதற்கு ஒரு பொதுவான காரணம்; கோதுமை போன்றவற்றை உட்கொள்ளுவதால் நாட்பட்ட வாய்ப் புண்கள் ஏற்படலாம். வாய்ப் புண்கள் ஏற்படுவதற்குப் பசையம் (gluten) உணர்திறன் காரணமாக இருந்தால், பசையம் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். பெரும்பாலான ரொட்டி வகைகள், (பாஸ்தா), பீர் போன்ற பானங்களைத் தவிர்த்தல் அவசியம். டையட் கோலா மற்றும் சர்க்கரையல்லாத மெல்லும் கோந்து போன்ற செயற்கையான சர்க்கரைகளினாலும் (அஸ்பார்டேம், நியூட்ரிஸ்வீட்) வாய்ப்புண்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
தடுப்பு முறைகள்
விபத்தினால் ஏற்படும் புண்களுக்கு, விபத்து ஏற்படும் மூல காரணத்தைத் தவிர்ப்பதனால் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால், விபத்து போன்ற நிகழ்வுகள் தற்செயலாக ஏற்படுவதனால், தடுப்பு முறை நடைமுறைக்கு ஒத்துவராது.
விபத்தின் காரணமாக வாயில் காயம் (கடித்துக்கொள்ளுதல் மற்றும் பல) ஏற்பட்ட தனிநபருக்குச் சந்தர்ப்பவாத பாக்டீரியா சார்ந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருந்தால். பாக்டீரியாப்பகை வாய்க்கழுவிகளின் மூலம் நேரடியாகக் காயத்தைக் கழுவுவதால், நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை வாயை வாய்க்கழுவிகளினால் கொப்பளிக்க வேண்டும். பாக்டீரியாப்பகை வாய்க்கழுவிகள் ஒரு முழு நிமிடமும் வாயினுள் இருக்கும் என்பதனால், சுவை உணர்வு குறைவு மற்றும் மற்றபடி விரும்பத்தக்க ஃப்ளோராவின் சாத்தியமான குறைவு போன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய தாக்கங்களை இது ஏற்படுத்தும். ஒரு மில்லிலிட்டர் அளவு சொட்டுகள் போதுமானதாக இருக்கிறது. பொதுவாக, காயம் ஏற்பட்ட 3 மணி நேரங்களுக்குள் முதல் சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மருத்துவம்
வாய்ப்புண்களுக்கு முதல்நிலை அணுகுமுறையாக, நோய்க்குறி சார்ந்த சிகிச்சை அமைகிறது. புண் ஏற்பட்டதற்கான காரணங்கள் அறியப்பட்டவுடன், அந்த நிலைக்கான சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும். போதுமான அளவு வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமாகவும் அறிகுறிகளிலிருந்து விடுபடலாம். ஆன்டி ஹிஸ்ட்டமின் அமில எதிர்ப்பிகள், கார்ட்டிக்கோஸ்டீராய்டு அல்லது வலியுள்ள புண்களைத் தணிக்கும் வகையில் உள்ள மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் புண்களின் வலி அறியாமல் இருக்கலாம்.
பாராசிட்டமால் மற்றும் ஓரிடத்திற்குரிய உணர்ச்சிநீக்கி லாசென்சர் போன்ற வாய்க்குரிய வலிநிவாரணிகளைப் பயன்படுத்தலாம். மென்ஸோகெயின் (வலி நிவாரணி) போன்ற வண்ணப்பூச்சுகள் அல்லது வாய்க் கழுவிகளும் வலியைக் குறைக்க உதவும். காரமான மற்றும் சூடான உணவுகளைத் தவிர்த்தலும் வலியைக் குறைக்கும் உப்புநீரைக் (வெதுவெதுப்பான உப்பு தண்ணீர்) கொண்டு வாயைக் கழுவினாலும்கூட வலி குறையும்.
இது ஒரு பழங்காலத்து தீர்வு முறையாகும். மூன்று வாரங்களுக்கும் மேலாக புண்கள் இருந்தால் ஒரு மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.