இன்றைய நாளில் நமதுபெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆய்வுக்குப் பயன்படும் பிராணிகள் பராமரிப்புக் கூடத்தினை (Animal House) தாங்கள் தலைமையேற்று, அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்து சிறப்பித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.
சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழா தங்களால், அமைச்சர்கள், மேயர் என பிரம்மாண்டமாக நடைபெற்றது எங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது.
அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில் தங்கள் நலனைத் தெரிந்து கொள்ள வருகை தந்த அமைச்சர் பெருமக்களுக்கும், எங்களுக்கும் தாங்கள் மிகப் பெரிய வாய்ப்பினையும், மகிழ்ச்சியினையும் அளித்திருக்கின்றீர்கள்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் அனைத்துப் பணித் தோழர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தங்களுக்காக மட்டுமல்ல, எங்களுக்காகவும் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தங்களின் மேலான வழிகாட்டுதலே எங்களின் சாதனைகள்.
மனமார்ந்த நன்றிகள் அய்யா!
– இரா. செந்தாமரை,
முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி