தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகத்தான எத்தனையோ திட்டங்களை தீட்டி நடத்தி நிறைவேற்றியிருந்தாலும், அவர் தலையாய கடமையாக இன்று நினைத்திருப்பது திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிறுகனூரில் அமையவுள்ள “பெரியார் உலகம்” தான். ஏனென்றால், வரும் உலகம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் வரலாறு அறிந்தால், திராவிடர் வரலாறையும், ஆசியத் துணைக் கண்டத்தின் வரலாறையும் அறிந்தவர்கள் ஆவார்கள் என்பதால் தான்.
அந்த மகத்தான பணியை ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க சிரமேற்கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக களத்தில், கட்டுமானத் திட்டமிடுதலில், கட்டடப் பணிகளைச் சிறப்பாக விரைவாக நடத்துவதில், இன்னும் 2 ஆண்டுகளில் மேற்கொண்ட அந்த பணியினை முடித்திட முன் நிற்கின்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கடந்த 15-08-2025 அன்று ஆசிரியர் அவர்களின் அறிக்கையின்படி “பெரியார் உலக”த்திற்காக நிதி திரட்ட கடும் வேலை நெருக்கடிக்கிடையிலும், சாலையில் இருந்த போக்குவரத்து நெரிசலைத் தாண்டியும் மகிழுந்தில் சென்னையிலிருந்து சேலம் வந்து சேர்ந்தார்.
பயனாடை அணிவித்து நலம் விசாரித்தார்
மூன்று மாவட்ட தலைவர்களையும் ஒன்றிணைத்து அனைத்து தோழர்களின் இல்லம் சென்று கொடையாளர்களுடன் உரையாடி கொடையாளர்களை நெகிழ வைத்த இளக வைத்த மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ, அவரின் இணையர் வாசந்தி, மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா.பாலு, மேட்டூர் மாவட்ட ப.க. தலைவர் கோவி.அன்புமதி, சேலம் மாவட்ட துணைத் தலைவர் சு.இமயவரம்பன், சேலம் மாவட்ட துணைச் செயலாளர் மூணாங்கரடு சரவணன், சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் துரை சக்திவேல் ஆகியோர் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பான வரவேற்பை நல்கினர்.
பொதுச் செயலாளர் அவர்கள் தாதகாப்பட்டியில் உள்ள சேலம் மாவட்ட துணைத் தலைவர் இரா.வீரமணியின் ‘வீரமணி டெக்ஸ்’ கடைக்குச் சென்றார். இரா.வீரமணிக்கும், மகன் பிரபாகரனுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து, மருத்துவப் பயனாளியாக உள்ள அவரின் மாமா மேனாள் சேலம் மாநகரத் தலைவர் பு.வடிவேலுவின் நலம் விசாரித்து அவரது இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்தார்.
பெரியார் உலகத்திற்கு நிதி
இரா.வீரமணி பொதுச் செயலாளரிடம் ரூபாய் 1,00,000/-ற்கான காசோலையை வழங்கினார்.
அடுத்ததாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் “சேலம் மரகதம் மாரியப்பன் மருத்துவமனையை” பார்வையிட்டார். மருத்துவரையும், பொறுப்பாளர்களையும், சந்தித்து அங்குள்ள நிறை குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் சேலம் மாவட்ட கழகக் காப்பாளர் கி.ஜவகர் வீட்டிற்கு சென்று அவருக்கும், அவரது மூத்த மகன் சைனா பாஸ்கருக்கும் பயனாடை அணிவித்து, ஜவகரின் நலம் விசாரித்தார். தந்தை பெரியார் அவர்களின் சிலை உருவாக்கத்தின் போது திட்டமிடுதலில் சைனா பாஸ்கரின் தார்மீக பங்களிப்பை நினைவுகூர்ந்து பாராட்டினார்.
ஜவகர் – ஜ.விசாலாட்சி – ரூபாய் 50,000, அவர் மகன் சைனா பாஸ்கர் – ரூபாய் 1,00,000 காசோலையை பொதுச் செயலாளரிடம் கொடுத்தனர்.
பிறகு, சேலம் குள்ள கவுண்டனூரில் மேட்டூர் மாவட்ட காப்பாளர் பழனி புள்ளையண்ணனின் வீட்டிற்கு சென்று அவரின் நலம் விசாரித்து அவருக்கும், அவரது இணையர் ரத்தினம், தாயார் காளியம்மாள் அவரது மகன் பு.வீரமணி (ஆசிரியர் அணி) ஆகியோருக்கு பயனாடை அணிவித்து நலம் விசாரித்தார்.
அங்கு குழுமியிருந்த தாரமங்கலம் ஒன்றிய கழகத் தலைவர் கென்னடி, ஓமலூர் ஒன்றிய கழகத் தலைவர் சவுந்தர்ராஜன், குள்ள கவுண்டனூர் ராஜேந்திரன் மற்றும் சேலத்திலிருந்து சென்ற கழகத்தோழர்களுடன் பழனி புள்ளையண்ணன், பொதுச் செயலாளருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். பொதுச் செயலாளரும், பழனி புள்ளையண்ணனும் அவசரகால நிலையின்போதும், மற்றைய காலங்களில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அளவளாவினார்கள்.
பழனி புள்ளையண்ணன்-ரத்தினம் ரூபாய் 1,00,000 காசோலையை பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் கொடுத்தனர்.
பின்பு, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மருத்துவப் பயனாளியாக உள்ள மேட்டூர் கழக மாவட்டக் காப்பாளர் கிருஷ்ணமுர்த்தி வீட்டிற்கு சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தார். அங்கு ஓய்வு பெற்ற கால்நடை உதவியாளர் சொக்கலிங்கம் – தந்தை பெரியார் அவர்களின் படத்தை தன் கையில் பச்சை குத்திக் கொண்டும், நெற்றியில் விபூதி பட்டை பூசிக்கொண்டும் காட்சியளித்த அவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் இங்கில்லாமல் போயிருந்தால், நாட்டு மக்களின் நிலை எந்தளவிற்கு மோசமாகியிருக்கும் என்று கேள்வியெழுப்பினார்.
பயன் தரும் தந்தை பெரியார் கருத்துகள்
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் அதையே எடுத்துக்காட்டாய் வைத்து, நமது கழகப் பணி இன்னும் எத்தனை தீவிரத்துடன் பட்டி தொட்டிகளிலெல்லாம் எடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதையும், மக்கள் தந்தை பெரியாரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும் அவரவர்களுக்கு தகுந்தவாறு உள்வாங்கிக் கொண்டிருப்பதையும், அதனால், அறிவாசான் அவர்களின் பேச்சும் கருத்துகளும் இன்றைய நாட்களிலும் நாளைய நாட்களிலும் நமது சமூகத்திற்கு உலக மக்களுக்கு எப்படியெல்லாம் தேவைப்படுகின்றன என்பதையும் விளக்கிப் பேசி விடைபெற்றார்.
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள மேனாள் மாவட்ட தலைவர் அ.ச.இளவழகன் வீட்டிற்கு சென்றார். அங்கு கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி, சேலம் மாவட்ட துணைத் தலைவர் அ.இ.தமிழர் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தார் பயனாடை அணிவித்து வரவேற்றனர். அதேபோல், வீ.அன்புராஜ் அவர்களும் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
அங்கு அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. அ.இ.தமிழர் தலைவருக்கு நடக்கவிருக்கும் சுயமரியாதைத் திருமணத்திற்கு முன்கூட்டிய வாழ்த்துகளையும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
அம்மாப்பேட்டையில் உள்ள “தந்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நூற்றாண்டு நிறைவு மண்டபமாக” உருவெடுக்கவுள்ள கட்டடத்தை பொதுச்செயலாளர் பார்வையிட்டார். அங்கு பொதுச்செயலாளரை வரவேற்க காத்திருந்த கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் அவரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
கழகத் துணைத் தலைவர்
கவிஞர் பிறந்த நாள்
அதுசமயம் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், “இன்று (15-08-2025) வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாள். ஏனென்றால் இது நமது கவிஞர் அவர்களின் பிறந்தநாள்” அதை நாம் உளமாற கொண்டாட வேண்டுமென்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்.
உடன், ஹென்றி & உல்ஸி யிலிருந்து ‘கருப்பு சிவப்பு’ வண்ணத்தில் கேக்கை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தருவித்தார்.
அனைத்து தோழர்கள் சூழ எல்லோர் சார்பாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கேக்கை வெட்டி “என்றும் இயங்கும் கவிஞர்” அய்யாவின் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
பின்னர் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் மூணாங்கரடு சரவணன் – ச.கோமதி ரூபாய் 1,00,000/= காசோலையை பொதுச் செயலாளரிடம் கொடுத்தார்.
பெரியார் பெருந்தொண்டர் தாசில்தார் இராம.வடிவேலுவின் புதல்வர் மருத்துவர் சேலம் வ.சுந்தரவேல் ரூபாய் 50,000த்திற்கான காசோலையை பொதுச் செயலாளரிடம் கொடுத்தார். மேலும் அய்ம்பதாயிரம் ரூபாயைத் தந்து நிறைவு செய்ய உள்ளதையும் குறிப்பிட்டார்.
சேலம் சூரமங்கலம் பகுதி கழகத் தலைவர் பழ.பரமசிவம் ரூபாய் 5000/=ற்கான காசோலையை பொதுச் செயலாளரிடம் கொடுத்தார்.
சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர் போலீஸ் ராஜு விடுதலை நாளிதழ் ஆண்டு சந்தாவை புதுப்பிக்க ரூபாய் 2000/= கொடுத்தார்.
சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ – வாசந்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் திடலில் 07-08-2025 அன்று ரூபாய் 1,00,000/= காசோலையை தன் மகன் வினோத் வீரமணி ராஜூ – பா.துர்காதேவி பெயரிலும், தன் மகள் தரங்கிணி வீரமணிராஜூ – இரா.ராம் மனோகர் பெயரில் மற்றுமொரு ரூபாய் 1,00,000-த்திற்கான காசோலை கொடுத்ததற்கும், அதேபோல், சேலம் மாவட்ட துணைத் தலைவர் சு.இமயவரம்பன் – சு.பூங்கோதை ஆகியோர் 07-08-2025 அன்று ரூபாய் 1,00,000/= காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் கொடுத்ததற்கும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
சேலம் மாவட்ட ப.க. செயலாளர் வழக்குரைஞர் ச. சுரேஷ்குமார், மாவட்ட ப.க துணைத் தலைவர் பொறியாளர் சிவக்குமார், சேலம் மாநகரத் தலைவர் அரங்க இளவரசன், சேலம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மணிமாறன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆத்தூர்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், மண்ணாக கிடந்த இந்த தமிழ் சமுதாய மக்களின் மான உணர்ச்சியை தட்டி எழுப்பி இந்த நாட்டில் நடைமுறையில் இருந்த ஜாதியால், மதத்தால், பெண்ணடிமை தனத்தால் பார்ப்பனிய அடிமைகளாய் மூடர்களாய் முடங்கி கிடந்த சமுதாயத்தை தனது எழுத்தாலும் பேச்சாலும் வீறுகொண்டு எழ நாடு முழுவதும் சுற்றி சுழன்று தனது வாழ்நாட்களிலே ஆதிக்க பிடியில் இருந்த அதிகாரத்தை பிடுங்கி அனைவருக்கும் பகிர்ந்து அளித்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை எதிர் வரும் சமுதாயம் தெரிந்து கொண்டு இந்த மண்ணில் எந்தவொரு ஆதிக்க அடக்குமுறை வந்தாலும் அதை எதிர்த்து தவிடு பொடியாக்க திராவிடர் சமுதாயம் வழிவகை தெரிந்து கொள்ள, ‘பெரியார் உலக’த்தை கட்டமைக்க தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தம் தலையாய கடமையாக கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் பெரியார் உலகம் தொடங்கி உலகையே பெரியார் மய்யமாக்க வேண்டும் என்று நம் இயக்க தோழர்களுக்கு கட்டளையிட்டார்.
இதன் விளைவாக ஏராளமான கருஞ்சட்டை தோழர்கள் தாமாக முன்வந்து பல ஆயிரங்கள் முதல் பல லட்சங்களை கொடுத்து மகிழ்ந்தார்கள்.
எனது எண்ணம் எல்லாம்
பெரியார் உலகமே!
இருப்பினும் இந்த செயல் திட்டத்தால் மிகப் பெரும் நிதி தேவைப்படுவதால் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது 92 வயதையும் கடந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையிலும் ‘எனது எண்ணம் எல்லாம் பெரியார் உலகமே’ என்று ‘விடுதலை’யின் வாயிலாக அறிக்கை வெளியிட்டார்.
இதன் விளைவாக தனக்கு எத்தனையோ பணிகள் இருந்தாலும் அதையும் கடந்து கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் உலகம் நிதி திரட்ட கடந்த 15.8.2025 அன்று காலையில் சேலத்தில் இயக்க தோழர்களை நேரில் சந்தித்து நிதிகளை வாங்கிக் கொண்டும், இயக்க மூத்த முன்னோடி தோழர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தும் அக மகிழ்ந்தார்.
பின்னர் மாலை 5.30 மணியளவில் ஆத்தூர் கழக மாவட்டத்தில் உள்ள ராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி அரங் கத்திற்கு வருகை தந்தார். ஏராளமான கழக தோழர்கள் கூடி நின்று கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
நிகழ்ச்சிக்கு ஆத்தூர் மாவட்ட தலைவர்
அ. சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார். பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி.தங்கவேல் காப்பாளர் த.வானவில், ப.க. மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன், ப.க. மாவட்ட தலைவர் வ.முருகானந்தம், ப.க. மாவட்ட செயலாளர் அ. அறிவுசெல்வம், நகர தலைவர் வெ.அண்ணாதுரை, மாவட்ட துணைச்செயலாளர்
ப. வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தொடக்கவுரையை ப.க. மாநில பொதுச்செயலாளர் வா. தமிழ்பிரபாகரன் நிகழ்த்தினார். சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ, மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா.பாலு, மேட்டூர் ப.க. பொறுப்பாளர் கோவி அன்புமதி, சேலம் மாவட்ட துணைச் செயலாளர் மூணாங்கரடு சரவணன் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து தமிழர் தலைவர் ஆசிரியரின் அன்புக் கட்டளையை ஏற்று, இரவு ப.க.ல் பாராது ஆத்தூர் கழக மாவட்டத்திற்கு மட்டுமே மூன்று முறை பயணம் செய்து கழக தோழர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை தந்தார்.
அதன்படி கழக மாவட்டத்திற்கு பத்து லட்சம் என்ற அடிப்படையில் நான்கு லட்சத்து முப்பதாயிரம் கழக பொதுச்செயலாளரிடம் வழங்கினார்கள்
மேலும் மீதி உள்ள தொகையை விரைவில் கொடுப்பதாக உறுதி கூறி உரையாற்றினார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன்.
கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் உலகம் பற்றி பல்வேறு தகவல்களை விளக்கமாக எடுத்துரைத்து இதன் தேவைகளை அடுத்த தலைமுறை தெரிந்து பயன்படுத்திக் கொள்ள நாம் அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்படுவோம் என்று எடுத்துரைத்தார்.
பெரியார் உலக நிதி
பின்னர் பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி.தங்கவேல் அவர்கள், கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர் களிடம் ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ச்சியாக காப்பாளர் த. வானவில் ஒரு லட்சத்திற்கான காசோலை, காங்கிரஸ் கட்சியின் ஆத்தூர் நகர மாநில பொறுப்பாளர் ஆர்.ஓசுமணி ஒரு லட்சத்திற்கான காசோலை, மாவட்ட செயலாளர்
நீ.சேகர் 75 ஆயிரத்திற்கான காசோலை, இலுப்பநத்தம்
கா.பெரியசாமி 25 ஆயிரத்திற்கான காசோலை, ப.க. மாவட்ட தலைவர் வ.முருகானந்தம் 25 ஆயிரம் ருபாய் தொகை, ப.க. மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் 5000 ருபாய் தொகை, ஆத்தூர் தந்தை பெரியார் அறக்கட்டளை சார்பாக 5000 ரூபாய் தொகை, பொதுக்குழு உறுப்பினர் க. கமலம் 3000 ரூபாய், அயோத்தியாபட்டணம் டாக்டர் ராஜேந்திரன் அவர்கள் 1000 ரூபாய் என மொத்தம்- 4,39,000 ருபாய் தொகையை கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினர். மற்றும் தம்மம்பட்டி வீராசாமி ஒரு ஆண்டுக்கான விடுதலை சந்தா ரூ.2000த்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் நரசிங்கபுரம் நகர தலைவர் வே. மணி, நகர அமைப்பாளர் மருத பழனிவேல், நகர செயலாளர் தா. திவாகர், மேனாள் மாவட்ட செயலாளர் கோபி இமையவர்மன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆ. செல்வம், இளைஞரணி மாவட்ட தலைவர் இரா.கார்முகிலன், தம்மம்பட்டி நகர தலைவர் வீராசாமி, வேப்பம்பூண்டி இளங்கோவன், கவுரிசங்கர், வேணுகோபால், இயக்க ஆதரவாளர் குமரேசன், மகளிரணி தோழர்கள் கு.ராதா, ந. சந்திரா, சே. முத்துலட்சுமி, பெரியார் பிஞ்சு மகிழ்நிலா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.