திருவில்லிபுத்தூர், ஆக. 22– 17.8.2025அன்று திருவில்லிபுத்தூர் நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம் காமராசர் சிலை அருகில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பழக்கடை இரா. கோவிந்தன் தலைமை தாங்கினார்.
தலைமைச் செயற்குழுஉறுப்பினர் இல. திருப்பதி தொடக்கவுரையாற்றினார்.
மாவட்டத்தலைவர் பூ. சிவகுமாரின் ‘மந்திரமா… தந்திரமா’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ச்சியாக கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார்செல்வன் மாநாட்டை விளக்கி சிறப்பானதொரு உரையாற்றினார். ஏராளமான பொதுமக்கள் நிகழ்வைக் கண்டு தெளிவு பெற்றனர்.
மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் இரா.பாண்டிமுருகன், விருதுநகர் மாவட்டத் தலைவர் நல்லதம்பி, சிவகாசி நகரத்தலைவர் நரசிம்மராஜ் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய அமைப்பாளர் போத்திராஜ் நன்றியுரையாற்றினார்.