தந்தையின் மன அதிர்ச்சிகள், மரபணுக்கள் மூலம் குழந்தைக்கும் கடத்தப்படுகின்றன ஆய்வு முடிவுகள்

ஆஸ்லோ, ஆக. 22– சிறு வயதில் ஆண்கள் சந்திக்கும் கடுமையான மன அதிர்ச்சி மற்றும் அதன் விளைவுகள், மரபணுக்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனநலன் சார்ந்த இந்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு, தந்தையின் அனுபவங்கள் குழந்தையின் எதிர்கால மன ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்த்துகிறது.

ஒரு ஆண், சிறு வயதில் எதிர்கொள்ளும் மன அதிர்ச்சி சம்பவங்கள், அவரது உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் மற்றும் அழற்சி விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றங்கள், அவரது விந்து செல்களின் மரபணுக்களில் பதிவாகி, அதன்மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கும் கடத்தப்படுகின்றன. இதனால், அந்த குழந்தையின் மனநலமும் பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு முடிவுகளின்படி, ஒரு தந்தை இளம் வயதில் அனுபவித்த மன வேதனைகள், அவரது குழந்தையின் மனநலன், உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவுமுறையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எதிர்காலத்தில், இதுபோன்ற மரபணு கடத்தல்களைக் கண்டறிந்து, அதன்மூலம் குழந்தைகளுக்குப் பொருத்தமான சிகிச்சை முறைகளை வழங்கு வதற்கான வழிகள் உருவாகலாம் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *