இஸ்தான்புல், ஆக. 22– சட்டவிரோதக் கடத்தலுக்கு உள்ளான ‘ஸெய்டின்’ என்ற ஒரு வயது கொரில்லா குட்டி, தற்போது இஸ்தான்புல் விலங்குத் தோட்டத்தில் மறுவாழ்வு பெற்று உள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் நைஜீரியா விலிருந்து தாய்லாந்துக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தின் சரக்குப் பெட்டிக்குள், மிகச் சிறிய குட்டியாக ஸெய்டின் கண்டறியப் பட்டு மீட்கப்பட்டது. பின்னர் இஸ்தான்புல்லுக்குக் (துருக்கி) கொண்டுவரப்பட்ட அந்தக் குட்டி, அங்குள்ள விலங்குத் தோட்டத் தில் சிறப்புப் பராமரிப்பில் வைக்கப் பட்டது.
தற்போது ஒரு வயது நிரம்பிய ஸெய்டினின் எடை அதிகரித்து, நலமாக வளர்ந்து வருகிறது. அத்துடன், அதன் பராமரிப்பாளர்களுடனும் அது நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
அதேவேளையில், ஸெய் டினை மீண்டும் அதன் தாயகமான நைஜீரியாவுக்குத் திருப்பியனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், அதிகாரிகள் ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளனர். ஸெய்டின் மீண்டும் சட்டவிரோத வர்த்தகத்திற்கு உட்படுத்தப்படாது என்றும், கொரில்லாக்கள் மட்டுமே வாழும் சரியான சூழலில் அது பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தால் மட்டுமே அதை நைஜீரியாவுக்குத் திருப்பியனுப்ப முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, வனவிலங்கு கடத்தலைத் தடுப்பதற்கும், மீட்கப்பட்ட விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கியப் படியாகும்.