நியூயார்க், ஆக. 22-– விமானங்களில் சன்னலோர இருக்கைகளுக்காகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அமெரிக்காவின் டெல்டா (Delta) மற்றும் யுனைட்டெட் (United) ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மீது ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.
விமானப் பயணத்தின்போது சன்னலோர இருக்கைகளைத் தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால், இந்த இரண்டு விமான நிறுவனங்களிலும் சில இருக்கைகள் சன்னல் இல்லாதவை யாக இருந்தாலும், அதற்காகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
நியாயமற்றது
விமான பயணச் சீட்டுகளை இணையதளங்களில் முன்பதிவு செய்யும்போது, சன்னலோர இருக்கைக ளைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த இருக்கைகளில் சன்னல் இருக்காது என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை என்று வாடிக்கையாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். சன்னல் இல்லாத இருக்கைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
வாடிக்கையாளர்களின் சார்பில் வாதாடும் வழக்குரைஞர்கள், விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்டா மற்றும் யுனைட் டெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இது வரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிக் கையையும் வெளியிடவில்லை. இந்தப் பிரச்சினை விமானப் பயணிகளின் உரிமைகள் குறித்து புதிய விவாதங்களைத் தொடங்கியுள்ளது.