முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தருமபுரிக்கு 17.8.2025 அன்று வருகை தந்த போது கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை செயராமன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர். செந்தில் உள்ளிட்ட பலதோழர்கள் சந்தித்தனர்.
முதலமைச்சர் அவர்கள் எங்களிடம் ‘‘நான் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றிருந்தேன், உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். நீங்கள் நன்றாக இருந்தால்தான், நாங்கள் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லிவிட்டு வந்தேன். நான் பேசியதாக தமிழர் தலைவரிடம் சொல்லுங்கள்’’ என்று சொன்னார் என ஊமைசெயராமன் தெரிவித்தார். உடன்: அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சேலம் இரா.ராஜேந்திரன்.