டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார்; தமிழ் நாட்டைச் சேர்ந்தவரை வேட்பாளராக நியமிக்க எதிர்க்கட்சிகள் அழுத்தம் தருவதாக தகவல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம்:‘இந்தியா’ கூட்டணி அதிரடி திட்டம்: வாக்குத் திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.
* ரயில்வே துறை நட்டத்தை மறைத்து லாபம் என கூறியுள்ளதை அம்பலப்படுத்தியது ஒன்றிய தணிக்கைத் துறை அறிக்கை. 2022-2023இல் ரூ.2517 கோடி நிகர லாபம் ரூ.5000 கோடி நட்டத்தை மறைத்து அறிவித்துள்ளது ரயில்வே துறை; இந்த நட்டத்தைக் கணக்கில் கொண்டால், 2022-2023இல் ரயில்வே துறை ரூ.5000 கோடிக்கு மேல் நட்டம் என்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும்போது, தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர்கள் மீது ‘வாக்குத் திருட்டு’ நடவடிக்கை எடுக்கப்படும்: ராகுல் காந்தி எச்சரிக்கை. பீகாரில் தனது வாக்காளர் அதிகார பயணத்தின் போது ஒரு கூட்டத்தில் உரையாற்றிய காந்தி, தேர்தல் ஆணையம் தனது “வாக்குத் திருட்டு” பிடிபட்ட பிறகும் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக கூறினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ”நேற்று நாங்கள் எங்கள் தலைமை தேர்தல் ஆணையரைத் தேடிக்கொண்டிருந்தோம், ஒரு புதிய பாஜக செய்தித் தொடர்பாளர் இருப்பதைக் கண்டோம்”: கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் ஆர்ஜேடி போன்ற எட்டு முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையரை கடுமையாக சாடினர்.
– குடந்தை கருணா