சென்னை மீனம்பாக்கம்
ஈ.வெ.ரா. தெருவில் வசித்து வந்த பெரியார் உணர்வாளர் – விடுதலை நாளிதழின் வாசகருமான ராதாகிருஷ்ணன் (வயது 91) நேற்று (18.8.2025) மதியம் மறைவுற்றார். இன்று (19.8.2025) காலை 8 மணிக்கு திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராதாகிருஷ்ணனின் உடல் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உடற்கொடையாக வழங்கப்படுகிறது என அவரது குடும்பத்தினர் சியாமளாபாய், ஹேமமாலினி, வெ.வைஷ்ணவி, வெ.பிராத்தனா வெ.ராகவேந்திர சாய் தெரிவித்தனர்.