கிருட்டினகிரி,ஆக. 18- கிருட்டினகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதி யழகனின் தாயார் கண்ணம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார்.
கிருட்டினகிரி மாவட் டம் பர்கூர் ஒன்றியம் ஆம்பள்ளி அடுத்த குட்டூர் கிராம கிராமத்தைச் சேர்ந்த மறைந்த பிரபல தொழிலதிபர் தேவராஜ் இணையரும் தே.உதயகுமார், தே.வளையாபதி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப் பினருமான தே.மதியழகன், தே.குணவதி மோகன் ஆகியோரது தாயாருமான தே.கண்ணம்மாள் தேவராஜ் (வயது 92) அவர்கள் 15.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு இயற்கை எய்தினார்.
மறைவு செய்தி அறிந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர் களும் – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் தே.மதியழகனை தொலை பேசியில் தொடர்பு கொண்டு அம்மையாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறினர்.
பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
16.8.2025 – சனிக் கிழமை நண்பகல் 12.00 மணியளவில் கிருட் டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் திரா விடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப்பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாவட்டச் செயலாளர் செ.பொன் முடி, மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட தொழிலாளரணி செ.ப.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், ஒன்றியச் செயலாளர் வி. திருமாறன், ஊற்றங்கரை
ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சீ.மு.இராசேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.சிலம்பரசன், மாவட்ட ப.க.துணைத் தலைவர்கள் மு.வேடியப்பன், அ.வெங் கடாசலம், ப.செயக்குமார், காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், கிருட்டினகிரி நகரத் தலைவர் கோ.தங்கராசன், சோலையார்பேட்டை பெரியார் செல்வம் உள்பட கழகப்பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துக் கொண்டு மாலை அணி வித்து இறுதி மரியாதை செலுத்தினர்.