விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் – எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவப் பருவந்தொட்டு, பெரியார் திடலில் வளர்ந்த எங்கள் பிள்ளை! ஈழத் தமிழர்களின் உரி மைக்காகக் கழகம் நடத்திய போராட்டத்தில் பங்கு ஏற்றுக் கைதும் செய்யப்பட்டவர்.
திராவிடர் இயக்கத்தின் மூன்றா வது குழல் துப்பாக்கி என்று நாம் கூறுவது வார்த்தை அழகுக்காக அல்ல – கொள்கை, நடப்பு, லட்சிய அடிப்படையில்தான்!
திராவிட இயக்கத்தோடு ஒன்றிப் பயணம் செய்து வரக் கூடியவர். ஆசைகாட்டி எந்த வலையை வீசினாலும், அதற்கெல்லாம் மயங்காத, உறுதியான இலட்சியவாதி!
சிற்சில சந்தர்ப்பங்களில் அவரை அழைத்து ஆக்க ரீதியாகக் கருத்துக் கூறும் அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ளும் உறவு எங்களிடம் உண்டு.
எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாத திருமா என்னும் அரிமா நீண்ட காலம் வாழ்ந்து, கட்டுப்பாட்டுடன் தமது இயக்கத்தை வெற்றிப் பாதையில் நடைபோட வைக்கும் தலைவராக நாளும் புகழ் பெற்று, இலட்சியப் பாதையில் தொண்டறம் புரிய நீடு வாழ உள்ளங் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
சென்னை
தலைவர்,
18.8.2025
திராவிடர் கழகம்