உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள்.
அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள்.
கொழுப்பும் எண்ணெய்யும் மிகுந்த நொறுக்குத் தீனிகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
வாந்தி எடுத்ததால் உடலில் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம் அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.
பயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரைமணி நேரம் முன்பு ‘அவோமின்’ அல்லது ‘ஸ்டமெடில்’ வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
வாயில் ஏற்படும் புண்கள் ஆறாமல் பத்து நாட்களுக்கு மேல் இருந்தாலும்.
வாயில் இருந்து இரத்தக்கசிவு ஏற்பட்டாலும்.
வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்பட்டாலும்.
நாக்கின் அடியில் சிறுகட்டிகளும் வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமான கன்னங் களும், ஈறு வீக்கங்களும் இருப்பின் கவனம் தேவை. நீண்ட நாட்கள் தொடர்ந்து வாயில் புண் ஏற்படுவது வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூறப்படுகிறது.