திருமண மோதிரத்துக்காக ரத்தினக்கல்லை மண்ணில் தேடி எடுத்த நியூயார்க் பெண் உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய விநோத முயற்சி

1 Min Read

நியூயார்க், ஆக. 18- திருமண மோதிரத்துக்காக கடையில் வாங்குவதற்குப் பதிலாக, நிலத்தடியில் இருந்து ரத்தினக்கல்லை தானே தோண்டி எடுத் திருக்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த மிக்ஸ்சர் ஃபோக்ஸ் (Micherre Fox) என்ற பெண். இதன் மூலம், திருமண வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதாது, கடின உழைப்பும் அவசியம் என்ற அழகான பாடத்தை அவர் உணர்த்தியுள்ளார்.

ரத்தினக்கல்

அமெரிக்காவின் அர்க் கன்சாஸ் மாநிலத்தில்  சுமார் 700 ஏக்கர் பரந்துவிரிந்த ‘Crater of Diamonds State Park’ பூங்காவில், பொதுமக்கள் கனிமங்களையும் ரத்தினக் கற்களையும் தேடலாம். அங்கு கண்டெடுக்கும் கற்களை அவர்களே வைத்துக்கொள்ளலாம். இந்தப் பூங்காவில் 3 வாரங்கள் தங்கி, 2.3 காரட் அளவிலான வைரத்தை மிக்ஸ்சர் ஃபோக்ஸ் கண் டெடுத்துள்ளார்.

ரத்தினக்கல்லை கண்டு பிடிப்பதற்காக அவர் இரண்டு வாரங்கள் பயிற்சி மேற்கொண்டதுடன், அதற்கான சிறப்புக் கரு விகளையும் வாங்கியிருந்தார். கடந்த மாதம் 8ஆம் தேதி தேடலைத் தொடங்கிய ஃபோக்ஸ், ஆரம்பத்தில் ரத்தினக் கல்லைக் கண்டு பிடிக்க முடியாமல் மனம் தளர இருந்தார். ஆனால், தனது முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து தேடியபோது, அழகிய ரத்தினக்கல் அவருக்கு கிடைத்தது

“ரத்தினம் பதித்த மோதிரத்தைக் கடையில் வாங்கிவிடலாம். ஆனால், திருமண வாழ்க் கையில் பணம் மட்டும் வைத்துக்கொண்டு பிரச்சி னைகளைத் தீர்க்க முடியாது. உழைப்பு அவசியம். இது என்னுடைய கடப்பாட்டின் வெளிப்பாடு,” என்று தனது முயற்சிக்கு அவர் காரணம் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *