வாசிங்டன், ஆக. 17- சீன அதிபர் சி சின்பிங், தான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை தைவான் மீது படையெடுக்க மாட்டோம் என உறுதியளித்ததாக, மேனாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்கு முன்பு, ஃபாக்ஸ் நியூஸ் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இதனைத் தெரிவித்தார்.
“பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கூறிய டிரம்ப், தனக்கும் சீனாவுக்கும் பொறுமை அதிகம் என்றும் குறிப்பிட்டார்.
தைவானை சீனா தனது ஒரு பகுதியாகவே கருதுகிறது.
இருப்பினும், தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடுகளில் அமெரிக்கா முக்கிய இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.