டோக்கியோ, ஆக.17- உலகின் மிகவும் மதிப்புமிக்க கரன்சியாக கருதப்பட்ட அமெரிக்க டாலர் தற்போது சரி வடைந்திருக்கிறது. குறிப்பாக ஜப்பானின் கரன்சியான ‘யென்’ அமெரிக்க டாலரை விட அதிக மதிப்பு மிக்க கரன்சியாக மாறி யிருக்கிறது.
வரிகள் மூலம் உலகையே அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, தற்போது டாலர் விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது.
இத்தனைக்கும் ஜப்பான் மீது கூட அமெரிக்கா வரியை போட்டிருந்தது. இந்த வரி விதிப்பால் அமெரிக்க கருவூலத்திற்கு அதிக அளவில் நிதி வந்து கொண்டிருப்பதாக கூறிய டிரம்ப், இது சரியான
நடவடிக்கை என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது அமெரிக்க கரன்சியின் மதிப்பு சரிந்திருக்கிறது.
ஜப்பானும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரியதாக பொருளாதாரத்தில் வளர்ந்து விடவில்லை. எனவேதான், பணவீக்க அபாயத்தை சமாளிப்பதில் பேங்க் ஆஃப் ஜப்பான் ‘பின் தங்கியுள்ளது’ என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் ஜப்பான் ஓரு மேஜிக்கை நடத்தி காட்டியது. அதாவது, ஜப்பானின் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்ப்பதை விட வேகமாக வளர்ச்சி அடைந்தது. எனவே அதன் கரன்சியின் மதிப்பும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வளர்ந்தது.
இந்த வளர்ச்சி காரண மாக அமெரிக்க டாலருக்கு எதிராக ஜப்பான் கரன்சியான ‘யென்’ 0.4%, யூரோ 0.25% என வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல இங்கிலாந்து கரன்சியான பவுண்டு 0.20%, ஆஸ்திரேலிய டாலர் 0.2% என மதிப்பு அதிகரித்திருக்கிறது. இப்படியாக அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்திருக்கிறது. இந்த சரிவுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கிய காரணம், டிரம்ப்பின் வரி அறிவிப்புதான். நட்பு நாடுகளான ஜப்பான், இங்கிலாந்து என அனைத்து நாடுகளுக்கும் டிரம்ப் வரியை போட்டார்.
வரி காரணமாக அமெரிக்காவில் முதலீடுகள் குறைந்திருக் கின்றன. எனவே டாலரை நம்புவதை விட, தங்கத்தையும் இதர கரன்சியையும்தான் முதலீட்டாளர்கள் நம்ப தொடங்கினர். இப்படியாக அமெரிக்காவின் டாலர் மதிப்பு சரிய தொடங்கியது.
முதலீடுகள் குறைந்த தால் பணவீக்கம் அதிகரித்தது. எனவே அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை குறைத்தது. வட்டி அதிகமாக இருந்தால்தான் முதலீடுகள் வரும். எனவே இது சங்கிலி தொடர் போல அப்படியே டாலர் மதிப்பை பின்னோக்கி தள்ளத் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா மற்றும் ரஷ்யா வேகமாக வளர்ந்து வருவதாலும், பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியாலும் அந்நாடுகள் சொந்த கரன்சியை பயன்படுத்து வதாலும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந் திருக்கிறது.