அமைச்சர்கள் கண்டனம்
சென்னை, ஜூன் 7- தமிழ்நாட் டின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முதலமைச்சர், அமைச்சர்களின் பயணங்களைக் கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுவதை ஏற்க முடியாது; அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு அரசியல் பேசக் கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
இதுகுறித்து செய்தியாளர்களி டம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழ்நாடு ஆளுநர் அண்மைக்காலமாக முழு அரசியல்வாதியாக தன்னை மாற் றிக் கொண்டிருப்பது, அவரது பேச்சுகள் மூலம் தெரிகிறது. இதன் ஒருபகுதியாக, ஊட்டியில் நடை பெற்ற துணைவேந்தர்கள் மாநாட் டில், ஆளுநர் தன் அரசியலை பேசி யுள்ளார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் கல்விச் சூழல் சரியில்லை; வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. தொழில் முதலீட்டு ஈர்ப்பு பயணங்கள், முத லீட்டாளர்களுடன் பேசுவதால் மட்டுமே முதலீடுகள் வந்துவிடாது என்று முதலமைச்சரின் பய ணத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசி, துணைவேந்தர் மாநாட்டை தனது அரசியல் மேடையாக ஆக்கியுள்ளார்.
ஏற்கெனவே சில பிரச்சினை களில் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் எதிராக வந்துள்ளதால் அதை திசைதிருப்ப ஆளுநர் இம் மாதிரி செயல்படுகிறார்.
தமிழ்நாட்டின் கல்வி வர லாற்றை அறியாமல் ஆளுநர் உள் ளாரோ என எண்ணத் தோன்று கிறது. உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப்பட்டியலில் 100 பல்கலைக்கழகங்களில் 22 தமிழ் நாட்டைச் சேர்ந்தவை, 100 கல்லூரி களில் 30 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஏற்கெனவே நிதி ஆயோக் வெளியிட்ட தரவரிசையிலும் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை 46.9 சதவீதம். 33.36 லட்சம்பேர் வந்துள்ளார்கள் என் றால் தமிழ்நாட்டின் கல்விச்சூழல் நன்றாக இருப்பதுதான் காரணம். தரவரிசையின் பல்வேறு கூறுகளில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கல்வி கட்டமைப்பில் தமிழ் நாடு மிகச்சிறப்பாக உள்ளது.
உண்மைகளை மறைத்துப் பேசுவது ஏன்?
பல்கலைக்கழகங்களின் வேந்த ராக ஆளுநர் இருந்து கொண்டு, உண்மைகளை மறைத்து பேசுவது ஏன் என்பது தெரியவில்லை. அதே போல், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தால் முதலீடுகள் வந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஜனவரி 2022 முதல் ஏப்ரல் 2023 வரை ஓராண்டில் 108 நிறுவ னங்கள், ரூ.1.81 லட்சம் கோடிக்கு முதலீடு செய்து, 1.94 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக 2021-2022இல் தமிழ் நாட்டில் 4.79 லட்சம் நிறுவனங் களில் 36.63 லட்சம் பேர் பணியாற் றுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2022-2023இல் 7.39 லட்சம் நிறுவனங்கள், 47.17 லட்சம் பணி யாளர்கள் என்ற அளவுக்கு உயர்ந் துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத் தின் கீழ் 4.94 லட்சம் பொறியியல், 10.34 லட்சம் கலை, அறிவியல் மாணவர்கள் திறன் பயிற்சி பெற் றுள்ளனர்.
ரோபோட்டிக் உள்ளிட்ட புதிய துறைகளில் திறன் பெற்றுள் ளனர். இதற்கான சான்றிதழ்களும் முன்னணி நிறுவனங்களால் வழங் கப்பட்டுள்ளன. 4ஆம் ஆண்டு படித்த பொறியியல் மாணவர்கள் 1.15 லட்சம் பேரில் 61,900 பேர் தலைசிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
எனவே, தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை, கல்விச் சூழல் இப்படி உள்ளது என்று குறை கூறுவதையும், முதலீடுகளை உரு வாக்குவதில் முதலமைச்சர் அல் லது அமைச்சர்கள் பயணங்களை கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுவ தையும் ஏற்க முடியாது. இந்த பயணங்களை தமிழ்நாடு முதல மைச்சர் மட்டும் மேற்கொள்ள வில்லை. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது சீனா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா நாடுகளுக்கு பயணித்து முதலீட் டாளர்களைச் சந்தித்து அழைத் துள்ளார்.
ஆளுநர் இந்த விடயத்தில் பிரத மரே நோக்கி கேள்வி எழுப்பியுள் ளதாகவே நினைக்கிறேன். எனவே, பாஜக இதுகுறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். நாட் டின் தொழில் வளர்ச்சிக்காக இப்பயணங்கள் மேற்கொள்ளப் படும் நிலையில், அவற்றின் விளை வுகளைத்தான் நாம் பார்க்க வேண் டும். முதலமைச்சரின் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கும் மேல் முதலீடுகள் வந்துள்ளன. பல உலகளாவிய முன்னணி நிறுவனங் கள் தொழில் தொடங்க முன்வந் துள்ளன. தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால்தான் முதலீட் டாளர்கள் வருகின்றனர். 2 ஆண்டு களில் ரூ.2 லட்சம்கோடிக்கு அதிக மாக முதலீடுகள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் சூழல் மிகவும் சிறப்பாக உள்ளது. இந்நிலையில், ஆளுநர் இவ்வா றான அரசியல்ரீதியான கருத்து களை கூற ராஜ்பவனை பயன் படுத்தக் கூடாது என வலியுறுத்து கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சர் மெய்யநாதன்
தமிழ் நாடு முதலமைச்சர் மட்டும் வெளி நாடுகளுக்கு முதலீட் டாளர்களை ஈர்ப்பதற் காகச் செல்லவில்லை. கடந்த 9 ஆண்டு களாக பிரதமர் மோடியும் பல நாடுகளுக்கு முதலீடுகளை மீட்டெ டுப்பதற்காக சென்று வந்தி ருக்கிறார். இதுதான் ஆளுநருக்கு நான் அளிக்கும் பதில். இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் செய்தி யாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள் முத லமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து விமர்சிக்கின்றனர். எடப் பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மாநில அரசின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள். முதல மைச்சரின் வெளிநாட்டு பய ணத்தை விமர்சனம் செய்த எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமிக்கு வெளியிட்ட பதில் அறிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவிக் கும் பொருந்தும். வெளிநாடு முதலீடுகள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. முதலமைச் சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை.
முத்தரசன் கண்டனம்
உதகமண்டலம் ஆளுநர் மாளி கையில் 5.6.2023 அன்று பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் மாநாடு நடை பெற்றுள் ளது. இம்மா நாட்டை தொடக்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை கருத்தில் கொண்டு, மாறிவரும் சூழலுக்கு தக்கபடி பாடத் திட் டங்கள் அமைய வேண்டும் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாடு அரசு மாநிலத்துக்கான தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை உரு வாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக் கும்போது அதற்கு இடையூறு செய்து, குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஏற்கதக்க தல்ல. அத்துடன், “நாம் வேண்டு கோள் விடுப்பதாலோ அல்லது அவர்களது நாடுகளுக்கு சென்று பேசுவதாலோ மட்டும் முதலீட் டாளர்கள் முதலீடு செய்ய முன் வரமாட்டார்கள்” என்று பேசியுள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு முதல மைச்சர் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, தமிழ்நாட்டில் நடத்தப்படும் பன்னாட்டு முத லீட்டார்கள் மாநாட்டிற்கு நேரில் அழைத்த துடன், அங்கு ரூபாய் 3 ஆயிரத்து 233 கோடி முதலீட்டுக்கான புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் செய்து திரும் பியுள்ள நிலையில் ஆளுநர் கூறிய கருத்து முதலமைச்சரின் அரசு முறை பயணத்தை சிறு மைப் படுத்தும் வன்மம் கொண்ட தாகும்.
மாநில அரசின் அரசு கட்ட மைப்பை வழிநடத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம்தான் இருக் கிறது. ஆளுநர்களிடம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்து உத்தர விட்ட பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவ டிக்கை அதிகார அத்துமீறலாக தொடர்வதை இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையா கக் கண்டிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.