இந்த நாட்டுக்கு நாம் பழங்குடி மக்கள்; சரித்திரக் காலத்திற்கு முன்பிருந்தே நாம் நாகரிகமாக வாழ்ந்தவர்கள்; இந்த நாட்டிற்கு நாமே சொந்தக்காரர்கள்; இந்த நாட்டை ஆண்டவர்கள்; இந்த நாட்டு வாக்காளர்களுக்கு நாமே காரணத்தர்கள். இந்த நாட்டிலே ஆறு, குளம், அணை இவைகளையெல்லாம் உண்டாக்கி வகைப்படுத்தியவர்கள் நாம். அப்பேர்ப்பட்ட நாம் ஒரு சிறு கூட்டத்தாரால் சூத்திரர்களாகப் பஞ்சமர்களாக, இழிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறோமா – இல்லையா? ஏன்? இந்நிலைக்குக் காரணம் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’