செங்கல்பட்டு, ஜூன் 7- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
செங்கல்பட்டு மாவட் டத்தில் ஆதிதிராவிடர், பழங் குடியினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான 16 ஆதிதிரா விடர் பள்ளி மாணவர் விடுதி கள், 9 பள்ளி மாணவியர் விடுதி கள். ஒரு கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர், மாணவியர்களும், கல்லூரி விடுதியில் பட்ட படிப்பு பயிலும் மாணவர்களும் சேருவ தற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
தகுதி மற்றும் விண்ணப்பிப் பதற்கான வழிமுறைகள்:- ஆதி திராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இணைய வழியில் லீttஜீs://tஸீணீபீஷ்.லீனீs.வீஸீ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண் டும். ஒவ்வொரு கல்வி யாண்டின் தொடக்கத்திலும் ஏற்கனவே விடு தியில் தங்கி பயி லும் மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பத் தினை இணைய வழியில் விண் ணப்பிக்க வேண் டும்.
இணைய வழியில் விண்ணப் பிக்க தவறிய மாணவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண் ணப்பப் படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து சமர்ப் பிக்கலாம். அவ்வாறு நேரடி யாக பெறப்படும் விண்ணப்பங்களை சிறப்பினமாக கருதி, அவ்விடுதியில் அனுமதிக்கப் பட்ட மாணவர்களின் எண் ணிக்கையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில், அவர் களையும் விடுதியில் தங்கி கல்வி பயில இருக்கும் பட்சத்தில், தேர்வு குழுவின் ஒப்புதல் பெற்று அனுமதிக்கப்படும்.
4-ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணாக்கர் (10%), பிற வகுப் பினர் (5%) என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படும். பள்ளிக் கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.
மாணவியருக்கும். பெற் றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் தந்தை வெளியூர் களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாண வர்களுக்கும் மேற்படி நிபந் தனை பொருந்தாது.
பெற்றோரின் ஆண்டு வரு மானம் ரூ.3 லட்சத்திற்கு மிகா மல் இருக்க வேண்டும். பள்ளி விடுதி யின் சேர்க்கை மற்றும் விண்ணப்ப பதிவு இன்று (7.6.2023) தொடங்கி இந்த மாத இறுதி வரை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.