நாகாலாந்து ஆளுநரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான இல.கணேசன் அவர்கள் மறைவிற்கு கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் கரு. அண்ணாமலை, வழக்குரைஞர் துரை அருண் ஆகியோர் உள்ளனர். தமிழர் தலைவரை சந்தித்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இல. கணேசன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். (சென்னை, 16.8.2025)