திருச்செந்தூர் ஆக.15 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில், கொடிபட்டம் வாங்குவது தொடர்பாக இருஜாதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கொடியேற்ற விழா ஒரு மணி நேரம் தாமதமானது.
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவிற்கான கொடிபட்டம் வழங்குவதில், இரண்டு ஜாதி சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மண்டபத்திலிருந்து வெளியேறினர்
செங்குந்தர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் கொடிபட்டத்தை மண்டபத்தின் வெளியே வைத்து தருவதாகக் கூறினர். இதற்கு மற்றோரு ஜாதி சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. மோதலுக்குப் பிறகு, ஒரு ஜாதி அமைப்பினர் மண்டபத்தில் இருந்து வெளியேறினர். பின்னர், கொடிபட்டத்தை கோவில் நிர்வாகத்திடம் இருந்து வாங்குவோம் என்று கூறி, அனைவரும் சிவன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு கொடிபட்டத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, அய்யப்பன் (அய்யர்) கொடிபட்டத்தை ஏந்தியவாறு யானை மீது அமர்ந்து, கோவில் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று கோவிலை அடைந்தார். இந்தச் சம்பவத்தால் கொடிபட்டம் வீதி உலா ஒரு மணி நேரம் தாமதமானது.