சென்னை, ஆக. 15– சென்னை புழுதிவாக்கம் உள்ளகரம் பெரியார் தெருவில் உள்ள 185 ஆவது வட்ட திமுக அவைத்தலைவர் அரங்கநாதன் அவர்களின் சகோதரியும், சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் நமது கழக உணர்வாளரும், கழகத் திற்கு பல வகையிலும் துணை புரியும் தோழர் சரவணக்குமாரின் அத்தையும், எஸ்.சக்திவே லின் தாயாருமான எஸ். கன்னியம்மாள் 13.8.2025 அன்று இயற்கை எய்தினார்.
செய்தியறிந்து சோழிங்க நல்லூர் மாவட்ட தலை வர் வேலூர் பாண்டு தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் தமிழி னியன்,ஆவடி மாவட்ட துணை செயலாளர் க. தமிழ்ச்செல்வன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் மற்றும் தாம்பரம் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மா.குணசேகரன் ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.