தாயுள்ளம்
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஆக. 28-ஆம் தேதியுடன் 45 நாள்கள் நிறைவடைவதால், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து அரசு தெரிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தகுதியானவர்களுக்கு பணம் எப்போது வரவு வைக்கப்படும் என்ற விவரத்தையும் விரைவில் அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான கிண்டல்!
இறந்தவர்களுடன்
டீ குடித்த ராகுல் காந்தி
டீ குடித்த ராகுல் காந்தி
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. இவற்றில் உயிரிழந்தவர்கள் எனக் கூறி நீக்கிய நபர்களை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். இந்நிலையில், ‘இறந்தவர்களுடன் டீ குடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை; இந்த தனித்துவமான அனுபவத்தை தந்ததற்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி’ என கிண்டலாக ராகுல் பதிவிட்டுள்ளார்.
‘மோடி ஜி.. ரோடு சரியில்ல…’
கடிதம் எழுதிய சுட்டி!
கடிதம் எழுதிய சுட்டி!
பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலில் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து 5 வயது சிறுமி ஒருவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘மோடி ஜி, கடும் போக்குவரத்து நெரிசலால் பள்ளிக்கு, அலுவலகத்திற்கு தாமதமாகப் போகிறோம், சாலை மோசமாக இருக்கிறது. உதவி செய்யுங்கள் என எழுதியுள்ளார். இந்த கடிதம் வைரலாக, பிரதமர் மோடி இதற்கு என்ன செய்ய போகிறார்? என நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.
மோசடியின் மறு பெயரோ!
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், முசாஃபர்பூரில் உள்ள ஒரு வீட்டில் 269 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தரவு வெளியிட்டது. இது அதிர்ச்சியை ஏற் படுத்திய நிலையில், ஒரேயொரு வாக்கு மட்டுமே உள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இது பிஜேபி தேர்தல் ஆணையத்தின் வாக்கு முறைகேட்டிற்கான சான்று என காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.
வங்கியில் வேலை வாய்ப்பு
எஸ்.பி.அய். வங்கியில் காலியாக உள்ள 5,180 ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 380 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 -28. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள், நேர்காணல் தேர்வுக் கட்டணம்: ரூ.750. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.26 இணையதள மூலம் விண்ணப் பிக்கவும்.
பகவான் செயல்?
மனம் உருகி பக்தி – பலியான பத்து பக்தர்கள்
மனமுருகி கடவுளை வழிபட்டுவிட்டு, மன நிறைவுடன் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு, பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானின் துவாசா மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற வேனும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் துடிதுடிக்க உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளன.