செய்திச் சுருக்கம்

2 Min Read

கடன் வட்டி தள்ளுபடி.. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக, வட்டி முதலாக்கத்தின் (interest on capitalization) மீது விதிக்கப்பட்டுள்ள வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவையை செலுத்திவிட்டு சொத்து விற்பனை பத்திரத்தை பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அன்புமணியை நீக்க
குழு அமைப்பு: ராமதாஸ்

பாமகவின் தலைவராக இல்லாத அன்புமணி பொதுக்குழுவை நடத்தியது தவறு என ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க (அ) சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த மே 30ஆம் தேதி முதல் கட்சியின் நிறுவனரான தானே தலைவராகவும் செயல்படுவதாக சுட்டிக் காட்டியுள்ளார். பாமகவில் தந்தை -மகன் மோதல் முடிவுக்கு வருவது எப்போது?

பிள்ளையார் பால்
குடித்த கதையா?

திண்டுக்கல் காந்திகிராமம் அருகே உள்ள சின்னாளப்பட்டி வள்ளுவர்நகரில் அம்மன் பால் குடித்த காட்சிப் பதிவு டிரெண்டாகி வருகிறதாம்.

பூசாரி ஒருவர் தேக்கரண்டி ஒன்றில் பாலை எடுத்து அம்மனுக்கு அன்பாக ஊட்டுவதும், அப்போது தேக்கரண்டியில் இருந்த பால் காணாமல் போவதும் காட்சிப் பதிவில் பதிவாகியுள்ளது.

இதனை கண்ட பக்தர்கள், சவுடம்மா தாயே..! என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டனர். ஆடி, அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பலரும் இதனை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது ஆதாரை எதிர்த்தவர் அல்லவா?

ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக இருந்தாலும், அதை குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகாரில் SIR சர்ச்சை தொடர்பான மனுவை விசாரித்தபோது ஆதார் குறித்த தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், ஆதார் அட்டையை உரிய சான்றாக அங்கீகரிப்பதற்கு முன் அதை சரிபார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *