சென்னை, ஜூன் 9 வங்கியின் சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெறுவதற்காக, மகாராட்டிரா வங்கி சென்னையில் வாடிக்கையாளர்களை அணுகும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வாடிக்கை யாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இந்தநிகழ்ச்சி வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுகளை மேம்படுத்துவதில் வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
மகாராட்டிரா வங்கியின் செயல் இயக்குநர் ஆஷீஷ் பாண்டே தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப் புரையாற்றுகையில்:
2023 மார்ச் மாதத்துடன் முடிவ டைந்த நிதியாண்டில், நிகர செயல்படாத சொத்துக்கள் (NPAs) 0.25 சதவீதமாக குறைந்துள்ளதால், மோசமான கடன் களை நிர்வகிப்பதைப் பொறுத்தவரை, மகாராட்டிரா வங்கி சிறந்த வங்கியாக உருவெடுத்துள்ளது. மகாராட்டிரா வங்கி லாபத்தில் மிக உயர்ந்த வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது, இந்த ஆண்டில் அடிமட்ட அளவில் 126 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.2,602 கோடியாக உள்ளது. மகாராட்டிரா வங்கி 2022-_2023ஆம் ஆண்டில் கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சியின் சதவீத அடிப்படையில் பொதுத்துறை கடன் வழங்கும் நிறுவனங்களில் முதலிடம் வகிக்கிறது” என்று கூறினார்.