திருவரங்கம், ஆக. 11- நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, People’s Development Initiatives (PDI), பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் திருச்சி கண் மருத்துவமனை இணைந்து 10.08.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பொது மருத்துவம், கண் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வு முகாமினை திருவரங்கம் அம்பேத்கர் நகரிலுள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் பொதுமக்கள் பயன் பெறும் வண்ணம் நடத்தியது.
ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சசிப்ரியா கோவிந்தராஜ் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் மருத்துவப் பயனாளிகள் அதிகம் பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் பெண்கள் நல மருத்துவர் சவுமியா தலைமையில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் 105 பேரும், மருத்துவர் திலகவதி தலை மையில் நடைபெற்ற மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையில் 21 பேரும், திருச்சி கண் மருத்துவமனையின் மருத்துவர் ஜெனிபர் தலைமையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் 57 பேரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெசிமா பேகம், பேராசிரியர் ரா. தினேஷ் மற்றும் மாணவர்கள் மருத்துவப் பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
இம்மருத்துவ முகாமில் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் செவிலியர் ஹெலன் மற்றும் செவிலிய மாண வர்கள் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற் கொண்டனர். மேலும் புற்றுநோய் கட்டிகள் தொடர்பான சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வும் இம்மருத்துவ முகாமில் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் People’s Development Initiatives (PDI) அமைப்பின் முகாம் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் ஹர்ஷமித்ரா மருத் துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாசலம் ஆகி யோர் சிறப்பாக செய்திருந்தனர்.