(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பி.ஜே.பி. வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
ஜனவரி 2015
குடியரசு தின விளம்பரம் அரசின் சார்பில் அனைத்துப் பத்திரிகைகளிலும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களாக வெளிவந்தன.
பிப்ரவரி 2015
ஜூலை மாதம் பாங்காங்கில் நடைபெற்ற சமஸ்கிருத மொழி மாநாட்டிற்காக கலந்து கொள் பவர்கள் என்று வெளியிட்ட பட்டியனில் சாமியார்களே அதிகம் இருத்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது ‘சமஸ்கிருத மொழியின் பாதுகாவலர்களாக; சாதுக்கள் உள்ளனர்; அவர்களுக்கு மரியாதை செலுத்தப்போகிறோம்’ என்று சுஷ்மா சுவராஜ் கூறினார்.
சமஸ்கிருதத்திற்கென விளம்பரத் திரைப்படம் ஒன்றை ஒன்றிய அரசே தயாரித்து வெளியிட்டது. இந்தப் படத்தில் பசுமாட்டைத் தெய்வமாகவும், அது மிகவும் புனிதமாகக் கருதப்பட வேண்டும் என்றும் மாமிசம் சாப்பிடுபவர்கள் கோபக்காரர்கள்; குற்றம் செய்பவர்கள் என்றும் அந்த சமஸ்கிருதப் படத்தின் மய்யக்கருத்து சொன்னது.
ஜூலை 2015
மாநிலப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தைக் கற்றுத்தர மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் விருப்பப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி ஆவன செய்து தருவோம் என்றும் ஒன்றிய மனிதவளத்துறை அமைச்சகம் அறிக்கை விட்டது. இதனடிப்படையில் அரியானா மாநிலத்தில் முதல் முதலாக சமஸ்கிருத பலகலைக்கழகம் அமைக்க சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது
செப்டம்பர் 2015
டில்லி பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் வேதம் தொடர்பான படிப்பிற்கு என்று சிறப்புப் பிரிவுகள் துவங்கப்பட்டன. இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஆங்கிலத்தை விரட்டியடிக்கும் சக்தி ஹிந்தி மொழிக்கு உண்டு; நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டுமானால், ஹிந்தி பங்களிப்பு அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது ‘பாஞ்சஜன்யா’ பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2015
2014-2015 ஆம் ஆண்டில் அரசின் ஓர் அங்கமான சமஸ்கிருதப் பிரச்சார நிறுவனம், அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.270 கோடி செலவிற்கான கணக்கை இன்றுவரை ஒப்படைக்கவில்லை என்று மாநிலங்களவையில் ஸ்மிருதி இரானி கூறினார். இருப் பினும் 2015-2016 ஆம் ஆண்டு வரவு செலவு கணக்கில் சமஸ்கிருதப் பிரச்சார நிறுவனத்திற்கு மேலும் 740 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
நவம்பர் 2015
லண்டனில் பேசிய மோடி சமஸ்கிருதத்தில் படித்தால் இந்தியாவில் நல்ல எதிர் காலம் உண்டு; ஆனால் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை விரும்பாதவர்கள் சமஸ்கிருதம் குறித்துப் பேசினாலே குற்றம் என்று சொல்கிறார்கள் என்று அயல் நாட்டில் கேலி செய்யும் விதமாக பேசினார். இந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசு வெளியிட்ட அனைத்துத் திட்டங்களும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்திலேயே இருந்தன.
சமஸ்கிருத மொழி வளர்ச்சி தொடர்பாக அமைக்கப்பட்ட என்.கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் அமைந்த கமிட்டி ஒன்றிய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள்.
கணிதம், வேதியல், பவுதீகம் போன்றவற்றுக்கு இணையாக சமஸ்கிருதப் பாடம் இருக்கவேண்டும்.
தற்போதைய சூழலுக்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை நவீன முறையில் கற்க ஆய்வுகள் நடத்தி வரும் கல்வி யாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். வரும் 10 ஆண்டுகளில் சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிபெற நீண்டகால செயல் திட்டம் ஒன்று வகுக்கப்படவேண்டும்.
ஜனவரி 2016
ஆர்.எஸ்.எசைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து கல்வி குறித்த புதிய திட்டத்தை ஸ்மிருதி இரானியிடம் கொடுத்து அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பிப்ரவரியில் இந்த விவகாரம் வெளிவந்த பிறகு முதலில் இது ஒரு கோரிக்கையே என்று கூறிய ஸ்மிருதி இரானி – ஜூன் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் பேசிய போது வேதிக் போர்ட் ஜூன் 16 ஆம் தேதி உருவாக் கப்படும் என்றும், இந்த பிரிவின் மூலம் பள்ளிமாணவர்களுக்குச் சமஸ்கிருதம் மற்றும் வேதங்கள் கற்றுத்தரப்படும் என்றும், நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்த சமஸ்கிருதம் மிகவும் தேவையான ஒன்று என்றும் சூட்டைக் கிளப்பி விட்டார்.
சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பனர்களின் இந்த மனப்பான்மை குறித்து அறிஞர் அண்ணா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
“தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் படித்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியாகக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்” (‘திராவிட நாடு’, 2.11.1947 பக்கம் 18).
பார்ப்பனர்கள் தமிழ் வேடம் போட்டாலும் அவர்களை நம்பலாமா? பாம்புக்கும் பழுதைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள வேண்டாமா?
– – – – –
நரேந்திர மோடி பிரதமர் ஆனாலும் ஆனார். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கெல்லாம் சமஸ்கிருதத்தில்தான் பெயர் சூட்டும் பட்டாபிஷேகம்? எடுத்துக்காட்டாக,
“அடல் பென்ஷன் திட்டம்” (Atal Pension Yojana)
”ஆம் ஆத்மி பீமா யோஜனா”
“இஞ்சியோன் செயல்திட்டம்”
”யுவ ஷக்தி சம்யோஜனா”
“நமாமி கங்கே”
“கிராமாலயா”
”ஜன்தன் – ஆதார் – மொபைல்”
”ராஜ்ய சிசு சுரக்ஷா”
”பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா”
”பிரதான் மந்திரி கிரிஷி யோஜனா”
”பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி யோஜனா’
”பிரதான் மந்திரி முத்ரா யோஜனா”
‘ஸ்வச் பாரத் இயக்கம்”
“ஜன்தன் யோஜனா”
”பிரதான் மந்திரி கரீப்”
“பிரதான் மந்திரி க்ருஷி கல்யாண் யோஜனா”
”கிரிஷி அம்தான் பீமா யோஜனா”
“பிரதான் மந்திரி க்ருஷி சின்சாய் யோஜனா”
”பரம்பராகாத் கிருஷி விகாஸ் யோஜனா”
“முக்தா பாரத்”
”பண்டித் தீன்தயாள் உபாத்யாய் உன்னத் கிருஷி ஷிக்சா’
”பிராதான் மந்திரி பசல் பீமா யோஜனா’
“க்ருஷி விக்யான் கேந்திரா”
”ராஷ்டிரிய க்ருஷி விகாஸ் யோஜனா”
”ராஷ்டிரிய கோகுல் யோஜனா”
“பசுதன் சஞ்சீவனி”
”சுவஸ்திய ரக்ஷா யோஜனா”
”மிஷின் மதுமேகா”
”உடுதே தேஷ்கா ஆம்நாகரீக்”
“நிர்னாயத் பந்து யோஜனா”
”ஜீவன் பீமான்”
“சம்பூர்ணா பீமா கிராமா யோஜனா”
”தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா”
”தர்பன்”
“அந்தியோத்யா அன்ன யோஜனா”
“கிராமின் சுவாச் சர்வேக்ஷான்”
“ஹர் கர் ஜல் பூர்த்தி”
“சுவச்சதான்”
”கிராமின் க்ருஷி மவுசன் சேவா”
“சைபர் சுவச்சத்தா கேந்திரா”
”பிரதான் மந்திரி வய வந்ததான் யோஜனா”
“ஜனனி சுரக்ஷா யோஜனா”
”ஜனனி சிசு சுரக்ஷா கார்யாக்ராம்”
“ராஷ்டிரிய கிஷோர் சுவஸ்திய கார்யாகிராம்”
“பிரதான் மந்திரி சுவஸ்திய சுரக்ஷா யோஜனா”
“இந்திரதனுஷ் யோஜனா”
“மிஷன் பரிவார் விகாஸ் யோஜனா”
”பிரதான் மந்திரி சுரக்சித் மந்திரித்த அபியான்”
”தீன்தயாள் அந்த்தியோதயா யோஜனா”
”சர்வ சிக்ஷா அபியான்”
”பிராஹிக் ஷக்”
”ராஷ்டிரியா மத்யமிக் சிக்ஷா அபியான்”
“உச்சத்தார் அவிஷ்கார் அபியான்”
“ராஷ்டிரிய ஷிக்ஷா அபியான்”
– ஏதாவது புரிகிறதா?
146.5 கோடி மக்களுக்குமான அரசு என்று சொல்லிக் கொண்டு – இப்படிச் செத்து சுண்ணாம்பாகிப் போன பழைமையான மொழியில் பெயர் சூட்டல்கள் – அப்படி என்றால் இது யாருக்கான அரசு?
– – – – –
மூடப்பட்டு வரும் சமஸ்கிருத
கல்வி நிலையங்கள்…
ஒன்றிய அரசு வலுக்கட்டாயமாக வேத மொழி என்ற பெயரில் சமஸ்கிருதத்தைக் கற்க மக்களை வற்புறுத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டுகளில் ஒன்றிய அரசு துவங்கிய சமஸ்கிருத மொழிக்கல்வி நிலையங்களில் மக்கள் சேராததால் மூன்றில் ஒரு பங்கு கல்வி நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன.
ஒன்றியத்தில் பாஜக அரசு மோடி தலைமையில் 2014ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சியில் அமர்ந்தது, அதே ஆண்டு கல்விக் கொள்கையில் சமஸ்கிருத வளர்ச்சியை முன்னெடுத்து நாடுமுழுவதிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்திற்கு சிறப்பு வகுப்புகள் உருவாக்கப்பட்டன. மேலும் மாநிலம் தோறும் ஒன்றிய அரசின் சிறப்புக் கல்வி நிதியின்கீழ் சமஸ்கிருத கல்வி நிலையங்கள் பீகார், உபி, ராஜஸ்தான் மத்தியப்பிரதேசம், அரியானா மற்றும் மகாராட்டிராவில் உருவாக்கியது. சோதனை முறையில் அரியானா மற்றும் ஜார்க்கண்டில் உண்டு உறைவிட சமஸ்கிருதப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. நாட்டில் சமஸ்கிருதம் படித்த ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி இருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதுமல்லாமல் பழமையான மொழியாக உள்ள சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் இக்கல்வி நிலையங்களை உருவாக்கி வருகிறோம் என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
ஆனால், கடந்த இரண்டு (2015-2016) ஆண்டுகளாக இந்த சமஸ்கிருதப் பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் சமஸ்கிருதம் படிக்க மாணவர்கள் இல்லாமல் வகுப்பறைகள் பூட்டியே கிடக்கின்றன. முக்கியமாக 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சி என்ற பெயரில் பெரிய திட்டத்துடன் உருவாக்கப்பட்ட சமஸ்கிருத கல்விநிலையங்களின்நிலை பரிதாபகரமாகஉள்ளது. இந்தியாவில் 120 பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்திற்கு என்று சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் சமஸ்கிருதத்தில் உள்ளன. மேலும் 15 சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களும் தனியாக உள்ளன. நாடு முழுவதிலுமுள்ள 1000 உயர்கல்வி நிலை யங்களில் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவ் வளவு இருந்தும் சமஸ்கிருதம் கற்க யாரும் முன்வரவில்லை.
இந்த நிலையில் தனியாக வேதப்பாடசாலைகள் கடந்த ஆண்டு பீகார், அசாம், டில்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் ஒன்றிய அரசின் நிதி உதவியோடு துவங்கப்பட்டன. இந்த வேதப் பாடசாலைகள் ஒன்றிய, மாநில அரசின் கல்வித்திட்டத்தின்கீழ் வராமல் தனித்துச் செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த வேத பாடசாலைகளில் சேர யாரும் முன்வராத நிலையில், இந்த வேதப் பாடசாலைகளை இழுத்து மூடிவிட அரசு முடிவு செய்துள்ளதாக சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
இப்பரிதாப நிலை குறித்து சமஸ்கிருதப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறும்போது, என்னுடைய பள்ளியில் கடந்த ஆண்டு இரண்டு மாணவர்கள் சேர்ந்தார்கள். ஆனால் அவர்கள் சில நாள்களிலேயே பள்ளியை விட்டு விலகிவிட்டனர். ஆகவே இந்த ஆண்டு நாங்கள் பள்ளியை மூடிவிடும் நிலையில் உள்ளோம் என்று கூறினார். (சான்று: ‘தினஇதழ்’ தலையங்கம், 12.9.2016).
‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு
என்ன சொல்கிறது (3.9.20216)
No Takers For Sankirit Courses Despite Push எவ்வளவு முட்டுக் கொடுத்தும், பணத்தை வாரி இறைத்தும் சமஸ்கிருதப் பள்ளிகளை இழுத்து மூடியதுதான் மிச்சம்! 15 சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்கள் 1000 உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருத பிரிவுகள் இழுத்து மூடப்பட்டன. விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைத்த பாடு இல்லை!
– வளரும்