“ஆண்மை” என்ற பதமே பெண்மையை இழிவுபடுத்துவது. பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் ஒழிய பெண்ணின் விடுதலை இல்லை.
– – – – –
பாவத்திற்குப் பயந்து ‘பதிவிரதை’யாய் இருப்பவளும், காவலுக்குப் பயந்து ‘கற்பா’யிருப்பவளும், மானத்துக்குப் பயந்து ‘பத்தினி’யாயிருப்பவளும், உதைக்குப் பயந்து ‘பதிவிரதை’யாயிருப்பவளும், ஒரே யோக்கியதை உடையவளே!
– – – – –
உங்கள் குறைபாட்டுக்கெல்லாம் மூலகாரணம் ‘சூத்திரர்’ என்று ஒப்புக் கொண்டதுதான். அதற்காக வெட்கப்படுங்கள்! “சூத்திரனாக” வாழ்வதைவிட அந்தப் பட்டத்தை ஒழிக்க சாவது மேல்!
– – – – –
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர் பார்க்கிறானோ, அப்படியே எல்லோரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கம் ஆகும்.