‘மாமன்னன் கரிகாலனுக்கு ஈடு இணை யார்?’ என்ற துண்டறிக்கையை ஒசூர் பகுதியில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்த துண்டறிக்கை பரப்புரை பயணத்தை திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் துண்டறிக்கை பெற்றுக்கொண்டு தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் க.கா.சித்தாந்தன், மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்,பொதுக்குழு உறுப்பினர் அசெ.செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ச.எழிலன், இரா.செயசந்திரன்,ஈரோடு பாண்டியன் ஆகியோர் ராம்நகர், தாலுகா அவலகம், நீதி மன்ற வளாகம், அசோக் லைலாண்ட் தொழிற்சாலை வாயில் பகுதி, அரசு கலைக்கல்லூரி வாயில் பகுதி,டைடான்வாட்ச் கம்பெனி வாயில் பகுதியில் துண்டறிக்கை பரப்புரை செய்தனர்.