திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தோட்டத்தில் தந்தை, மகன்கள் இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்கச் சென்ற காவல்துறை துணை ஆய்வாளர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் ஒரு கோடி நிதி உதவி அறிவித்துள்ளார்.