கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சி.பி.எம்., சி.பி.அய்., அ.தி.மு.க. முதலிய கட்சிகள் மேல் முறையீடு செய்துள்ளன. திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றனும் இவ்வழக்கில் இணைத்துக் கொண்டார். வழக்குரைஞர் சு. குமாரதேவன் மனுவைத் தாக்கல் செய்தார்.
கட்சிக் கொடிக் கம்பங்கள் வைக்க வழிகாட்டல்கள்
தலைவர்கள், நடிகரின் பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதா?
விதிகளை உருவாக்க
மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மதுரை, ஆக.7– தலைவர்கள், நடிகர்களின் பெரும் பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதா? என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், கட்சிக்கொடிக்கம்பங்கள், பெரும் பதாகைகள் (பேனர்) வைக்க வழிகாட்டுதல்களை ஏற் படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
அகற்ற உத்தரவு
தமிழ்நாட்டில் சாலையோரங்களிலும், உள்ளாட்சி களுக்கு சொந்தமான இடங்களிலும் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும்படி கடந்த ஜனவரி மாதம் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் சண்முகம் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜயகுமார், சவுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இதில் மற்ற கட்சிகளும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் எனவும் கடந்த விசாரணையின்போது உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அ.தி.மு.க.,மதிமுக.,த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.