தமிழ்நாடு வணிக வரித் துறை இணை ஆணையர் (ஓய்வு) மானமிகு எஸ். இராஜரத்தினம் (வயது 79) 04.08.2025 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
உடல் நலி வுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மறைவுற்ற அவருக்கு சிதம்பர வடிவு (பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை தலைமைச் செவிலியர் (ஓய்வு)) என்ற இணையரும், மகன் ஆர். நெப்போலியன் (USA) மகள்கள் குயின் லதா (USA) , ரேணுகா ஆகியோரும் உள்ளனர்.
மறைந்த இணை ஆணையர் அவர்கள் ரவிக்குமார்- மும்பை, புனிதா குமார்- பெங்களூரு, சரவணா ராஜேந்திரன் ஆகியோரின் பெரியப்பாவுமாவார்.
அவரது உடல் இன்று (07.08.2025) அவரின் சொந்த ஊரான கோவில்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.