டோக்கியோ, ஆக. 7- ஜப்பானில் கடந்த 2024-ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருமளவில் சரிவடைந்துள்ளது.
கடந்த பல ஆண்டு களாகக் குறைந்துவரும் பிறப்பு விகிதம், அந்நாட் டின் மக்கள் தொகையை மேலும் பாதித்துள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய குடும்ப நலன் திட்டங்களை அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜப்பானின் மக்கள் தொகை சுமார் 909,000 வரை குறைந்துள்ளது. இது தொடர்ச்சியாக 16-ஆவது ஆண்டாக நிகழ்ந்துள்ளது.
1968-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இதுவே ஜப்பான் மக்கள் தொகை கண்ட ஆகப் பெரிய சரிவு ஆகும். தற்போது ஜப்பானின் மொத்த மக்கள் தொகை 120.65 மில்லியனாக உள்ளது.
இந்த நிலையைச் சமாளிக்க, வேலை நேரம் குறைப்பு, குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.