அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்

2 Min Read

சென்னை, ஆக.6 நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப் புகள் கட்டாயம் என்று அறிவிக்கப்ப ட்டுள்ளது.

ஜெர்மன், ஜப்பான், கொரியன் மற்றும் டச்சு ஆகிய வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 300 பொறியியல் இணைப்பு கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான கல்வி விதிமுறைகள்-2025-அய் அண்ணா பல்கலைக்கழக கல்வி கவுன்சில் சமீபத்தில் அங்கீகரித்து இருக்கிறது.

இந்த புதிய கல்வி விதிமுறைகள் நடப்பு கல்வியாண்டில் இருந்து முதல் 2 செமஸ்டர்களுக்கு செயல் படுத்தப்பட உள்ளன. புதிய விதி முறைகளின்படி, நடப்பாண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர இருக்கும் அனைத்து பி.இ., பி.டெக். மாணவர்களுக்கும் வெளிநாட்டு மொழி, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றன.

தன்னாட்சி அதிகாரம் (தன்னாட்சி கல்லூரிகள்) பெற்ற கல்லூரிகள் ஏற்ெகனவே வெளி நாட்டு மொழி படிப்புகளை வழங்கி வரும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகம் தற்போது இணைப்பு கல்லூரிகளுக்கு இதை கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

அந்தவகையில், நடப்பாண்டில் பொறியியல் மாணவர்கள் ஒவ் வொருவரும் தங்களுடைய 2-ஆவது செமஸ்டரில் ஜெர்மன், ஜப்பான், கொரியன் மற்றும் டச்சு ஆகிய வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் படிக்க வேண்டும்.

மேலும் புதிய விதிமுறைகள் பி.இ., பி.டெக். படிப்புகளின் முதல் 2 செமஸ்டர்களில் காப்புரிமை தாக்கல், தொழில் பாதுகாப்பு விதி முறைகள், வெல்டிங் செயல்முறைகள், மின்னணு கூறுகள் போன்ற வாழ்க்கைத் திறன் படிப்புகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இந்த புதிய விதிமுறைகளின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் 2 தொழில் சார்ந்த படிப்புகளை வழங்க அனுமதிக்கின்றன. இந்த படிப்புகள் ஒவ்வொரு செமஸ்டரிலும் 15 மணி நேரம் கற்பிக்கக்கூடிய ஒரு ‘கிரெடிட் பேஸ்’ படிப்புகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 3-ஆவது செமஸ்டர் முதல் 5-ஆவது செமஸ்டர் வரையில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு படிப்புகளை கல்லூரிகள் வழங்கலாம் எனவும், மாணவர்கள் எந்த ஒரு இணைய வழியில் படிப்புகளை தொடரலாம் எனவும் இந்த புதிய விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *