ஏங்கல்ஸ் மறைவு (1895)

கம்யூனிசத் தத்துவ மேதை   பிரெட்ரிக் ஏங்கல்ஸ்  1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி லண்டனில் காலமானார்.

கார்ல் மார்க்ஸுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதியவர். மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு, மூலதனம் (Das Kapital) என்ற அவரது புகழ்பெற்ற நூலின் இரண்டு மூன்றாம் தொகுதிகளை வெளியிடுவதில் ஏங்கல்ஸ் முக்கியப் பங்காற்றினார்.

அவரது மறைவு, உலகத் தொழிலாளர்களுக்கும் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் ஒரு பெரிய இழப்பாகக் கருதப்பட்டது. அவரது சிந்தனைகளும், எழுத்துகளும் இன்றும் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச இயக்கங்களுக்கு உந்துசக்தியாக விளங்குகின்றன.

***

பசுவதைத் தடைக்கு எதிர்ப்பு (5.8.2000)

தமிழ்நாடெங்கும் பசுவதைத் தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் கண்டனப் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் நடத்தியது. சென்னையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நடந்தது. பல்வேறு கட்சித் தலைவர்களும், மாட்டிறைச்சித் தொழிாலளர்களும் பங்கு கொண்டனர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *