4.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் கோரி, தெலங்கானா காங்கிரஸ் சார்பில் டில்லியில் ஆகஸ்டு 5 முதல் 7 வரை தொடர் போராட்டம்.
* டில்லியில் வரும் 7ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 8ஆம் தேதி, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டில்லி காவலர் (Police) வங்க மொழியை ‘பங்களா தேஷ் மொழி’ என்று கூறியதற்கு ஒன்றிய அரசு மீது முதலமைச்சர் மம்தா, இடதுசாரிகள் கடும் கண்டனம்
* தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி பதவி களுக்கு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 4,398 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்காக ஜூன் 26 அன்று துறை வெளியிட்ட அரசு உத்தரவின்படி, அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் பெண்களுக்கும் ‘முடிந்தவரை’ சமமான பிரதி நிதித்துவம் வழங்கப்படவேண்டும்.
தி இந்து:
* “சனாதன தர்மம் இந்தியாவை அழித்து விட்டது” அதன் சித்தாந்தம் “வக்கிரமானது” மற்றும் “வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறை” என தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர அவ்ஹாத் விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மீண்டும், மீண்டும்: ”இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்”, மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.
– குடந்தை கருணா