* பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல்

4 Min Read

* செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது

* தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது

* ‘கரிகால் சோழனுக்கு நிகர் யார்?’ துண்டறிக்கை இளைஞர் அணி சார்பில் பரப்புவது திருவாரூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

திருவாரூர், ஆக. 4– திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 03-08-2025 ஞாயிறு மாலை 6: 00 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழக அலுவலக வீரமணி அரங்கத்தில் நடைபெற்றது

திருவாரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ஏற்று உரையாற்றினார் மாவட்டத் துணைத் தலைவர் எஸ். எஸ்‌.எம்.கே.அருண்காந்தி அனைவரையும் வரவேற்பு உரையாற்றினார்

திராவிட விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் வீ.மோகன், மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராசு மாவட்ட செயலாளர் சவு சுரேஷ் மாவட்டத் துணைச் செயலாளர் மனோஜ் பகுத்தறிவாளர்களாக மாவட்ட தலைவர் அரங்க ஈவேரா விவசாய தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் வீரையன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்

தொடர்ந்து கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் ஏகாம்பரம், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சரவணன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் நாகராஜ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் அறிவழகன், நன்னிலம் ஒன்றிய தலைவர் தன்ராஜ், நன்னிலம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நன்னிலம் ஒன்றிய ப.க. தலைவர் கரிகாலன், திருவாரூர் நகரத் தலைவர் சிவராமன், திருவாரூர் நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் பிளாட்டோ, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உமாநாத், முனியாண்டி, மருதம் மாறன், வடுகக்குடி முருகையன், தக்கலூர் வீரமணி, ஒன்றாம் பாளையம் மணிமாறன், திருவாரூர் நகரத் தலைவர் சிவராமன், திருவாரூர் நகரச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது, விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்கிட வேண்டும். செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாத இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் குடும்பத்துடன் பங்கேற்பதின் அவசியம், இளைஞரணி சார்பில் துண்டறிக்க பரப்புரை பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது பற்றியும், ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குறித்தும் கருத்துரை ஆற்றினார்

தீர்மானங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருவாரூர் கழக சார்பில் நிதி திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அறிவுலக  ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை ( செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில்,  கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, மாநகரின் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த  நாளை எழுச்சியுடன் கொண்டாடும் வகையில் பெரியார் பட ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

கழக கொள்கையினை விளக்கி மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் திருவாரூர் கழக சார்பில் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று கரிகால் சோழன் சாதனைக்கு ஈடு இணை யார் ? என்ற சிறப்பான கட்டுரை துண்டறிக்கையை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல் பகுதிகளில் இளைஞரணி சார்பாக வழங்கி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 16,17 தஞ்சாவூரில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது

திருவாரூர் மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள் விழா ஒருங்கிணைப்பாளர்கள் – பெரியார் பிறந்த நாள் விழா ஒன்றியத்தில் நடத்துவதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், திருவாரூர் ஒன்றியம்- ம.மனோஜ்  மாவட்ட துணை செயலாளர், நன்னிலம் ஒன்றியம் – கி.அருண்காந்தி மாவட்ட துணை தலைவர், குடவாசல் ஒன்றியம் -வீர.கோவிந்தராஜ் மாவட்ட காப்பாளர், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் – சு.கிருட்டினமூர்த்தி மாவட்ட தலைவர், கொராடாச்சேரி ஒன்றியம் – சவு.சுரேஷ் மாவட்ட செயலாளர்

மாவட்ட கலந்துரையாடலில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நோக்கமாக கொண்டு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *