சபோரிஜியா அணுமின் நிலையம் அருகே ரஷ்யா தாக்குதல் அணுசக்திப் பாதுகாப்பு குறித்து அய்.நா. அமைப்பு கவலை!

லெனிக்கிரேட், ஆக. 4– உக்ரைனில் போர் தொடர்ந்து வரும் நிலையில், சபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு (Zaporizhzhia Nuclear Power Plant) மிக அருகில் உள்ள பாதுகாப்பு வளாகத்தின் மீது ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அனைத்துலக அணுவாயுத எரிசக்தி அமைப்பு (International Atomic Energy Agency – IAEA) உறுதிப்படுத்தியுள்ளதுடன், அணுசக்தி பாதுகாப்பு குறித்து தீவிர கவலையை எழுப்பியுள்ளது.

அய்.ஏ.இ.ஏ. (IAEA) தலைவர் ரஃபேல் கிரோசி (Rafael Grossi) இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அணுசக்தியைப் பொறுத்தவரை எந்தவிதமான தாக்குதலும் ஆபத்தானதாக அமையும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான இந்த வளாகம் அணுமின் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத் திலேயே அமைந்துள்ளது.

தாக்குதலின் போது பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், பாதுகாப்பு வளாகத்திலிருந்து கரும்புகை வெளியேறியதை ஊழியர்கள் கண்டதாகவும் அய்க்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அய்.ஏ.இ.ஏ. (IAEA) தெரிவித்துள்ளது.

போர்ச் சூழலில் அணுமின் நிலையங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தாக்கப்படுவது பெரும் அணுசக்தி பேரழிவுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை இந்த சம்பவம் அதிகரித்துள்ளது.

அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *