பாசறைவாணர் தேனிசைச் செல்லப்பா, தனது பேரன் ”பாவேந்தன் இளங்கோவன்” பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் திடலுக்கு குடும்பத்துடன் வருகை தந்து, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்தார். பாவேந்தன் இளங்கோவனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார். உடன் தேனிசை செல்லப்பாவின் இணையர் விஜயா, மருமகள் மணிமேகலை, பேத்தி குயில்மொழி ஆகியோர் உள்ளனர். (பெரியார் திடல், 7.6.2023)