* வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் மேனாள் பிரதமர் பேரனுக்கு சாகும் வரை ஆயுள்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஓபிசி பிரிவினர் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் பாடுபடுகிறது, முதலமைச்சர் ரேவந்த் பெருமிதம்.
* பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தம், ஒரு மோசடி என்கிறார் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவன் வர்மா
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘அரசியலமைப்பு முற்றுகையிடப்பட்டுள்ளது’: “அவர்களின் (பாஜக-ஆர்எஸ்எஸ்) சித்தாந்த முன்னோர்கள் மனுஸ்மிருதியை மகிமைப்படுத்தினர், மூவர்ணக் கொடியை நிராகரித்தனர், ஜனநாயகமற்ற ஒரு ஹிந்து ராஷ்டிரத்தை கற்பனை செய்தனர்” பாஜக-ஆர்எஸ்எஸ் ‘சித்தாந்த சதி’க்கு சதி செய்வதாக சோனியா காந்தி குற்றச்சாட்டு.
* பீகார் சிறப்பு தேர்தல் வாக்காளர் திருத்தம்: ஆகஸ்ட் 7 ஆம் தேதி டில்லியில் இந்திய கூட்டணித் தலை வர்கள் கூடுவார்கள் என்று பரூக் அப்துல்லா தகவல்.
தி இந்து:
* தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் “கைப்பாவையாக” மாறிவிட்டது; தேர்தல் ஆணையம் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பறிக்க விரும்புகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு.
* “மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ய முடியும். 2024 மக்களவைத் தேர்தலிலும் மோசடி நடந்துள்ளது. இதை நிரூபிக்க தரவுகளும் ஆவணங்களும் இப்போது உள்ளன. இதை நாங்கள் நிரூபிக்க போகிறோம்” காங்கிரஸ் சட்ட மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரில் இருந்து 6.5 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்க்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு.
– குடந்தை கருணா