ஜகார்தா, ஆக. 3– இந்தோனேசியா வில் உள்ள லெவொட்டொபி லக்கி-லக்கி (Lewotobi Laki-laki) எரிமலை நேற்று (2.8.2025) மீண்டும் வெடித்துள்ளது.
எரிமலையிலிருந்து கிளம்பிய சாம்பல் – புகை 10 கிலோமீட்டர் உயரத்திற்குப் பரவியதாக இந்தோனேசியாவின் எரிமலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக இந்த எரிமலை பலமுறை வெடித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வெடிப்பின்போது சாம்பல் 18 புகை கிலோமீட்டர் உயரத்திற்குப் பரவியது. அதன் காரணமாக அருகிலுள்ள பாலி தீவில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
எரிமலையிலிருந்து 6-7 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வெளியேறும்படி மக்களை எரிமலை ஆய்வகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், கனமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்றும் ஆய்வகம் எச்சரித்துள்ளது. ஆய்வகம் வெளியிட்ட ஒளிப்படங்களில் எரிமலையிலிருந்து எரிமலைக்குழம்பு வழிந்தோடியது தெளிவாகத் தெரிகிறது.