2025 அக்டோபர் 4 ஆம் தேதியில் செங்கல்பட்டு – மறைமலை நகரில் நடைபெறவிருக்கும், “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழக மாநில மாநாட்டுப் பரப்புரைக்கு என்றே தனியாக பரப்புரை வாகனம் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த வாகனம் பெரியார் திடலுக்கு நேற்று (1.08.2025) வருகை தந்தது. பரப்புரைக்கென்று தயார் செய்யப்பட்டிருந்த 15 நிமிட பொம்மலாட்ட கலை நிகழ்ச்சியை, பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் மற்றும் இரண்டு தோழர்கள் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர். கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தய்யன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன் மற்றும் தோழர்கள் கலைநிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 60 நாட்கள், நாளொன்றுக்கு 5 இடங்கள் என்று 300 இடங்களில் மாநாடுக்கு வருகை தர மக்களுக்கு அழைப்பு விடுத்து, பிரச்சாரம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. (பெரியார் திடல், 1.08.2025)