டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்திய பொருளாதாரம் செத்த பொருளாதாரம்: அதிபர் டிரம்ப் விமர்சனத்தால் பரபரப்பு, பாகிஸ் தானுக்கு அமெரிக்கா சலுகை மேல் சலுகை.
* மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட 7 பேரும் விடுதலை: ஆதாரங்களை சரியாக அளிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தர்மஸ்தலாவில் உடல்கள் புதைப்பு விவகாரம் – ஆறாவது இடத்தில் தோண்டியபோது 12 எலும்புகள் கண்டெடுப்பு. எஸ்அய்டி அதிகாரிகள் முன்னிலையில் மீட்பு. கருநாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதாக மேனாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரை விசாரிக்க மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
தி டெலிகிராப்:
* மோடி அரசு மே 2014 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, செப்டம்பர் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை பலவீனப்படுத்தியதாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது, 2015 ஆம் ஆண்டில், சிறப்பு அரசு வழக்குரைஞர் ரோகிணி சாலியன், மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது “மென்மையாக” நடந்து கொள்ள அழுத்தம் கொடுத்ததாகக் கூறி வழக்கை விட்டு விலகினார்.
தி இந்து:
* உள்ளாட்சி தேர்தல்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு இமாச்சல பிரதேச அமைச்சரவை ஒப்புதல்.
*‘கன்னியாஸ்திரிகள் மீது பொய்யான அறிக்கை வெளியிட பஜ்ரங் தளம் எங்களை கட்டாயப் படுத்தியது. சத்தீஸ்கரில் பழங்குடி பெண்களில் ஒருவரான கமலேஸ்வரி பிரதான் புகார். பெண்களை கடத்தியதாகவும், வலுக்கட்டாயமாக மதம் மாற்றியதாகவும் கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் மற்றும் நாராயண்பூரில் வசிக்கும் சுக்மான் மண்டாவி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, பஜ்ரங் தள உறுப்பினர் ரவி நிகம் அவர்கள் மீது புகார் அளித்ததை அடுத்து, துர்க் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
* பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல இந்தியா கூட்டணி திட்டம்.
– குடந்தை கருணா