புலவர் மா. நன்னன், அவரது மகன் டாக்டர் அண்ணல் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழாவில் டாக்டர் மா. நன்னன் எழுதிய இவர்தாம் பெரியார் (வரலாறு) –14, தொழிலாளர், புரட்சிக்காரி மாதவி, இடுக்கண் களைவதும் இடித்துரைப்பதும் நட்பு (சிறுகதைகளின் தொகுப்பு) ஆகிய நூல்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். விழாவில் புலவர் மா.நன்னனின் நினைவாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சுயமரியாதைத் திருமணம் புரிந்த அய்ந்து வாழ்விணையர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழும், பரிசுத் தொகையும் வழங்கி புலவர் மா. நன்னன் குறித்த இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். உடன்: புலவர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி, மகள்கள் வேண்மாள், அவ்வை.
(சென்னை 30.7.2025)