மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும் இறுதி நாளான 24.07.2025 அன்று பேசிய ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா பேசும் போது “பெரியார் வழிவந்த கொள்கையாளர்கள் மட்டுமே அலங்கரித்த பதவி இது. அடுத்து இங்கு வருபவர்கள் இந்த இடத்தை இவர்களின் கொள்கைகளை நிரப்புவார்களா என்று எனக்குத் தெரியாது” என்று பேசினார்.
இந்த நிலையில் வை.கோ இருந்த இருக்கை திரைப்பட நடிகரும் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமலஹாசனுக்கு ஒதுக்கி மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் உத்தரவிட்டார்.