தினமலரின் கோணல் புத்தி!

2 Min Read

பா.ஜ.வுக்கு போட்டி

கரிகால சோழனுக்கு விழா: தி.க.,வழியாக தி.மு.க.,திட்டம்

ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனை பா.ஜ., கையில் எடுத்த நிலையில், அதற்கு போட்டியாக, கல்லணையை கட்டிய கரிகால சோழனை முன்னிலைப்படுத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சித்தாந்த ரீதியாக தி.மு.க.,வை எதிர்கொள்ள, தமிழர்களின் அடை யாளமாக திகழும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன்; கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழீஸ்வரர் கோவிலை கட்டிய ராஜேந்திர சோழன் ஆகியோரை பா.ஜ., முன்னிலைப்படுத்தி வருகிறது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் கடந்த 27ம் தேதி நடந்த ராஜேந்திர சோழ னின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசுகையில், ‘சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் பாரதத்தின் அடையாளங்கள். தமிழ கத்தில் அவர்கள் இருவருக்கும் பிரமாண்டமான சிலை நிறுவப்படும்’ என்றார்.

இது, தி.மு.க.,வுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் தாக்கம், நேற்று முன்தினம் லோக்சபாவில், ‘ஆப்பரேஷன் சிந்துார்’ விவாதத்தில் பேசிய தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேச்சில் எதிரொலித்தது.

‘கங்கைகொண்ட சோழபுரம் என்ற பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; கங்கையை வென்றவன் அவன். தமிழன் கங்கையை வெல்வான்; அதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று, பிரதமர் மோடியின் கங்கைகொண்ட சோழபுரம் வருகையை கடுமையாக விமர்சித்தார்.

சோழ மன்னர்களுக்கு, குறிப்பாக ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், கல்லணையை கட்டிய கரிகால சோழன் ஆகியோருக்கு, தமிழக மக்களிடம் பெரும் மதிப்பும், மரியாதையும் உள்ளது.

திராவிட இனவாதம், தமிழ் மொழி ஆகிய இரண்டையும் வைத்து அரசியல் செய்தாலும், சிவன் கோவில்களை கட்டியவர்கள், சைவத்தை அரச மதமாக கொண்டவர்கள் என்பதால், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனை தி.மு.க., முன்னிலைப்படுத்தியதில்லை.

எனவே, பா.ஜ., அவர்களை கையில் எடுத்துள்ளதோடு, இரு சோழ மன்னர்களுக்கும் தமிழகத்தில் பிரமாண்ட சிலை வைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தது, சித்தாந்த ரீதியாக தங்களை பலவீனப்படுத்தும் என தி.மு.க.,வும், அதன் தாய் அமைப்பான தி.க.,வும் கருதுவதாக கூறப்படுகிறது.

அதை முறியடிக்க, 2,000 ஆண்டு களுக்கு முன், காவிரியின் குறுக்கே கல்லணை கட்டிய கரிகால சோழனை முன்னிலைப்படுத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, வரும் செப்டம்பரில் கல்லணை யில், ‘திராவிட பண்பாட்டு பாதுகாப்பு மாநாடும், கல்லணை தந்த கரிகால சோழன் விழாவும்’ என்ற நிகழ்ச்சிக்கு தி.க., ஏற்பாடு செய்துள்ளது.

இதனால், நீண்ட காலத்திற்கு பின், தமிழக அரசியல், சோழ மன்னர்களை மையமாக வைத்து சுழல ஆரம்பித்துள்ளது.

கரிகால சோழன் ஆன்மிகவாதியா?

கரிகால சோழனுக்கு தி.க., விழா எடுப்பது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘கரிகால சோழன் என்றதும், அனைவருக்கும் கல்லணை தான் நினைவுக்கு வரும். அணை என்றால் ‘வளர்ச்சி!’ எனவே, மதத்தை முன்னிறுத்தும் பா.ஜ.,வுக்கு போட்டியாக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அணை கட்டிய கரிகாலனை கொண்டாடுகிறோம்’ என்றனர்.

‘கரிகாலனுக்கும், ஆன்மிகத்திற்கும் தொடர்பில்லை என்பது போல் தி.மு.க.,வினர் காட்ட முயன்றாலும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பழமையான கோவில்களில், கரிகால சோழனுக்கு சிலைகள் உள்ளன. அவரை நினைவுகூரும் சின்னங்களும் உள்ளன’ என பா.ஜ.,வினர் தெரிவித்தனர்

(தினமலர் 31.7.2025 பக். 13)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *