திருச்சி, ஜூலை 31- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் பதவி ஏற்பு விழா நேற்று (30.7.2025) நடைபெற்றது. மொழி வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமையில், இருபால் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து மாணவிகளின் முன்னிலையில் நடை பெற்றது.
தேர்தல் குறித்த விழிப்புணர்வு
பள்ளி மாணவத் தலைவியை தேர்ந்தெடுக்க தேர்தல் முறை ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் மாணவிகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து. மாணவத் தலைவி மற்றும் துணைத் தலைவியைத் தேர்வு செய்வதுடன், தேர்தல் நடைமுறை மற்றும் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வையும் பெறுகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக பள்ளி மாணவத் தலைவி, துணைத்தலைவி, நான்கு அணிக்களுக்கான (House Captain & Vice Captain) தலைவி மற்றும் துணைத் தலைவி, NCC, NSS, NGC,JRC, & Guide இயக்கங்களுக்கான தலைவி, துணைத்தலைவி மற்றும் தமிழ், ஆங்கிலம். கணிதம், வானவில் மற்றும் சமூகஅறிவியல் மன்றங்களுக்கான செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளி தலைமையாசிரியர் பதவி பிரமாணம் செய்து வைத்து பேட்ஜ் அணிவித்தார். பதவியேற்ற மாணவிகள் தங்களுக்கான கடமைகளை செய்வதற்கான உறுதிமொழியை ஏற்று. பதவி ஏற்றுக்கொண்டனர். இறுதியாக விழ நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.