சென்னை, ஜூலை 31- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுத் தேதிகளை வெளியிட்டுள்ளார். மேலும், பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
காலாண்டு மற்றும்
அரையாண்டுத் தேர்வு விவரங்கள்:
அரையாண்டுத் தேர்வு விவரங்கள்:
காலாண்டுத் தேர்வு: 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும்.
காலாண்டு விடுமுறை: காலாண்டுத் தேர்வைத் தொடர்ந்து செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வு: அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதியுடன் நிறைவடையும்.
அரையாண்டு விடுமுறை: அரையாண்டு விடுமுறையாக டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், “முதலமைச்சரின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் (20252026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/ அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயாராகுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் தேர்வுத் திட்டங்களை வகுத்துக்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது என்ன கோமாளி கூத்து?
நாய்க்கு சான்றிதழாம் – டிராக்டருக்கு இருப்பிடமாம் – சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்!
பாட்னா, ஜூலை 31– பீகாரில் வாக்காளர்கள் திருத்தப் பட்டியல் விவகாரத்துக்கு இடையே, தெருநாய்க்கு இருப்பிட அடையாள சான்றிதழ் வழங்கப்பட்டது சர்ச்சையாகி இருந்தது. இந்த நிலையில், அந்த வரிசையில் உயிரற்ற டிராக்டருக்கும் இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ள தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் டிராக்டர் ஒன்றுக்கு சோனாலிகா டிராக்டர் என்ற பெயரில் குடியிருப்பு சான்றிதழ் கேட்ட தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த டிராக்டர் ஸ்வராஜ் டிராக்டர் மற்றும் கார் தேவி வம்சாவளியில் வந்ததாக கூறப்பட்டு உள்ளது.
ஆனால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு இணைய வழி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஜூலை 17ஆம் தேதியிட்டு – கிடைக்கப் பெற்ற அந்த ஆன்லைன் விண்ணப்பம் கோட்வா தாலுகா அதிகாரியால் பெறப்பட்டு உள்ளது.
ஆனால் அது உடனே நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பத்தில் போஜ்புரி நடிகையின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பி உள்ளனர்.
அந்தகுறும்புக்கார விண்ணப்பதாரர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறோம், அவர் பிடிபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர்.